Published : 06 Mar 2014 12:00 AM
Last Updated : 06 Mar 2014 12:00 AM

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்: ஓட்டுக்கு பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை; தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பேட்டி

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.

இந்த முறை ஓட்டுக்குப் பணம் வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் புதன்கிழமை பிரவீன் குமார் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 29-ம் தேதி தொடங்குகிறது. மனுத் தாக்கல் செய்ய ஏப்ரல் 5 கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7-ல் நடக்கும். மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 9 ஆகும். ஏப்ரல் 24-ல் வாக்குப்பதிவும் மே 16-ல் வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. மே 28-ம் தேதி தேர்தல் நடைமுறைகள் முடிவடையும்.

அமைச்சர்களுக்கு கட்டுப்பாடு

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. தேர்தல் செலவுக்கணக்கு கண் காணிப்பும் உடனடியாகத் தொடங்குகிறது.

*நிதி உதவித் திட்டங்கள் எதையும் மாநில அரசு அறிவிக்கக் கூடாது. புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்கக் கூடாது. புதிய நிதி ஒதுக்கீடுகள் கூடாது. எந்தவித வாக்குறுதியும் தரக்கூடாது.

*அமைச்சர்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் திட்ட அடிக்கல் நாட்டு விழாவிலோ அல்லது புதிய திட்டத் தொடக்க விழாவிலோ பங்கேற்கக் கூடாது.

*சாலை அமைத்துத் தருவதா கவோ, குடிநீர் உள்ளிட்ட இதர வசதிகளை செய்து தருவதாக வோ உறுதி அளிக்கக் கூடாது.

*அரசுத் துறைகள், நிறுவனங்களில் புதிய நியமன ங்கள் மற்றும் தற்காலிக நியமனங்கள் எதுவும் செய்யக் கூடாது.

*அமைச்சர்கள், தங்களது அரசு அலுவல் பணிகளையோ, அரசு முறைப் பயணங்களையோ தேர்தல் பணிகளுடன் ஒன்றாக வைத்துக் கொள்ளக் கூடாது. அரசு இயந்திரங்களை தேர்தல் பணிக்குப் பயன்படுத்தவே கூடாது.

பறக்கும் படைகள் கண்காணிப்பு

தேர்தலை நியாயமாக, நேர்மையாக நடத்துவதற்கும், வாக்காளர்களை எந்தவொரு கட்சியினரும் தவறான வழிகளில் கவருவதைத் தடுக்கவும், அரசி யல் கட்சியினர் செய்யும் செலவு களைக் கண்காணிக்கவும் தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

பறக்கும் படைகள் (ஒரு சட்ட மன்றத் தொகுதிக்கு மூன்று), கிராமந்தோறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங் கள் அடங்கிய கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ கண்காணிப்புக் குழுக் கள், ஓரிடத்தில் நின்று கண் காணிக்கும் குழுக்கள் அமைத்தும் சோதனைச் சாவடிகள் அமைத் தும் கண்காணிப்புப்பணி மேற் கொள்ளப்படும். இதன் மூலம் பண விநியோகம், ஆயுதக்கடத் தல், மதுபாட்டில் விநியோகம் போன்றவை தடுக்கப்படும்.

'அம்மா' குடிநீர் பாட்டிலில் முதல்வர் படம் கூடாது

பிரவீன் குமார் மேலும் கூறுகையில், ‘‘அரசு இலவசத் திட்டங் களை உடனே நிறுத்தக் கூறி அனைத்து ஆட்சியர்களுக்கும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அம்மா உணவகத்தில் ‘அம்மா’ என்ற பெயர் இடம் பெறுவது, சென்னை சிறிய பஸ்களில் இரட்டை இலைச் சின்னம் இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பான சந்தேகங்களுக்கு தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

அவர்கள் பதிலுக் காக காத்திருக்கிறன். அம்மா குடிநீர் பாட்டில்களில் முதல்வர் படம் இடம்பெறுவதை உடனே நிறுத்த வேண்டும். முதியோர் ஓய்வூதியம் வழங்குதல், 100 நாள் வேலைத் திட்டம் தொடரலாம்” என்றார்.

பணம் வாங்குவது குற்றம்

ஓட்டுக்காக பணம் கொடுப்பதும் வாங்குவதும் கடும் குற்றம். மக்களவைத் தேர்தலில் இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனால், பணம் வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x