Published : 03 Jun 2015 10:32 AM
Last Updated : 03 Jun 2015 10:32 AM

சென்னை கடற்கரை வழியாக அரக்கோணத்தில் இருந்து தாம்பரத்துக்கு விரைவில் நேரடி புறநகர் ரயில் சேவை: ரயில்வே அதிகாரி அறிவிப்பு

அரக்கோணத்தில் இருந்து தாம்பரத்துக்கு கடற்கரை வழியாக நேரடி புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மண்டல மேலாளர் அனுபம் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:

தாம்பரத்தில் இருந்து அரக்கோணத்துக்கும், அரக்கோணத்தில் இருந்து தாம்பரத்துக்கும் கடற்கரை வழியாக நேரடி புறநகர் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தாம் பரத்தில் இருந்து புறப்படும் ரயில், கடற்கரைக்கு வந்து 5 நிமிட காத் திருப்புக்கு பின்னர் அரக்கோணத் துக்கு புறப்படும். மறுமார்க்கமாகவும் இதேபோல இந்த ரயில் இயக்கப்படும். இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும். இந்த ரயிலில் 12 பெட்டிகள் இருக்கும். இதற்கு ஏற்றவாறு ரயில் நிலையங்களில் உள்ள நடை மேடைகள் விரிவாக்கப்படும்.

திருவள்ளூர் அரக்கோணம் இடையே 3-வது தடம் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின் றன. நெமிலிச்சேரி, பெரம்பூர், வஉசி நகர் ஆகிய இடங்களில் சுரங்கப் பாதைகள் அமைக்கப்படவுள்ளன. சென்னை புறநகர் மின்சார ரயில் களில் தினமும் 8 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். அவர்களுக்கான வசதியை ரயில்வே தொடர்ந்து செய்து கொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து திருநின்றவூர் ரயில் பயணிகள் சங்க தலைவர் முருகையன் கூறும்போது, “வடசென் னையில் இருந்து தென் சென்னைக்கு செல்லும் பயணிகள் சென்ட்ரலில் இறங்கி பூங்கா ரயில் நிலையத்துக்கு நடந்து சென்று அடுத்த ரயிலை பிடித்துவந்தனர். இதனால் பயணிகள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வந்தனர். இந்த புதிய திட்டத்தால் பயணிகளின் கஷ்டங்கள் தீரும் என்று நம்புகிறோம். தாம்பரம் - அரக்கோணம் இடையே தூரம் அதிகம் என்பதால் இந்த ரயிலை ‘பாஸ்ட் லோக்கல்’ வண்டியாக இயக்கினால் கூடுதல் பலனளிக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x