Published : 28 May 2014 09:34 AM
Last Updated : 28 May 2014 09:34 AM

மீனவர் நலனுக்கு தனி அமைச்சகம்: தமிழக மீனவர்கள் எதிர்பார்ப்பு

கடந்த ஜனவரி மாதம் ராமேஸ் வரத்தில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கடல் தாமரை மாநாட்டில் பேசிய சுஷ்மா சுவராஜ், “பாஜக ஆட்சி அமைத்தால் மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க தனியாக மீனவர் நலத்துறை என்னும் இலாகா உருவாக்கப்படும் என்று கூறினார். இப்போது பாஜக வெற்றி பெற்று அமைச்சரவையையும் உருவாக்கிவிட்டது. ஆனால் அதில் மீனவர் நலத்துறை உருவாக்கப்படவில்லை. இது மீனவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தென்னிந்திய மீனவர் நல அமைப்பின் தலைவர் பாரதி கூறியதாவது: மோடியாகட்டும் மற்ற பாஜக தலைவர்களாகட்டும் ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் மீனவர் பிரச்னையை பற்றி தெளிவாக பேசினார்கள். முக்கிய மாக ஓட்டு கேட்டு வரும் போதெல்லாம் மீனவர் நலனை கணக்கில் கொண்டு தனி அமைச் சரவை உருவாக்கப் படும் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் அவர்கள் பேசியதற்கு மாறாக மீனவர் நலனுக்காக எந்த இலாகாவும் தொடங்கப்படவில்லை.

குஜராத் பாகிஸ்தான் எல்லையில் குஜராத் மீனவர்கள் படுகிற கஷ்டங்களை மோடி அருகிலிருந்தே பார்த்தவர். எனவே அவர்மீது எங்க ளுக்கு பெரிய நம்பிக்கை இருந்தது. ஆனால் அவரது அமைச் சரவையில் தனி மீனவர் நலத்துறை உருவாக்கப்படாதது, அவரும் மற்ற அரசியல்வாதிகள் போலத்தான் என்று எண்ண வைத்துள்ளது. இனிமேலும் இலங்கை கடற்படையின் தாக்கு தலுக்கு ஆளாகி உயிர்விட்டு கொண்டேயிருக்க முடியாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x