Published : 09 Jun 2015 07:45 AM
Last Updated : 09 Jun 2015 07:45 AM

இடைத்தரகர்கள் குறுக்கீட்டை தடுக்க அனைத்து மயானங்களிலும் தகவல் பலகைகள் வைப்பு

மாநகராட்சிக்கு சொந்தமான மயானங்களில் சடலங்களை அடக்கம் செய்யவோ, எரிக்கவோ இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என்ற விழிப்புணர்வு தகவல் பலகையை சென்னை மாநகராட்சி நிர்வாகம் அனைத்து மயானங்களிலும் வைத்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி மயானங்களில் இடைத்தரகர்கள் தலையீடு இருப்பதாகவும், அதிக கட்டணத்தை செலுத்த வேண்டி யிருப்பதாகவும் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து மேயர் சைதை துரைசாமி பதில் அளித்தபோது, “சென்னையில் மொத்தம் 26 மயானங்கள் உள் ளன. இதில் சடலங்களை புதைக் கவோ, எரிக்கவோ கட்டணம் கிடையாது. இது தொடர்பான அறிவிப்புப் பலகைகள் அனைத்து மயானங்களிலும் உடனடியாக வைக்கப்படும். மயானங்களில் அதிக கட்டணம் வசூலித்து முறைகேடுகளில் ஈடுபடுவது மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரியவந்தால், சம்பந்தப்பட்ட வர்களை கையும் களவுமாக பிடித்துக் கொடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

அனைத்து மயானங்களிலும் இடைத்தரகர்களை நம்பாதீர், முன் பதிவுக்கு மயானத்தில் உள்ள அலுவல கத்தை அணுக வும் என்று குறிப்பிடப்பட்ட விழிப்புணர்வு தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள் ளன. மேலும் அந்தந்த பகுதி நிர்வாகியின் கைபேசி எண்களும் தகவல் பலகையில் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x