Published : 02 Jun 2015 08:30 AM
Last Updated : 02 Jun 2015 08:30 AM

பாவம் கருணாநிதி.. டிராஃபிக் ராமசாமிக்காக காத்திருக்கிறார்! - அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேட்டி

இந்திராகாந்தி, ராஜாஜி, காமராஜர் போன்றோரிடம் அரசியல் செய்த கருணாநிதி பாவம், தற்போது டிராஃபிக் ராமசாமிக்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்று அதிமுக-வின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ’தி இந்து’வுக்கு அவர் அளித்த பேட்டி:

சொத்துக் குவிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கர்நாடக அரசு எடுத்திருக்கும் முடிவு குறித்து..?

உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளி யாகி இத்தனை நாட்கள் மவுனமாக இருந்தவர்கள், தற்போது மேல் முறையீடு முடிவுக்கு வந்திருப்பதன் பின்னணியில் அவர்களுக்கு யாரோ அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள், அவர்களை நிர்பந்தித்திருக் கிறார்கள். ஏன்.. நெருக்கடிகூட கொடுத்திருக்கலாம். அவர்கள் யார் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. அது யாரென்று அனைவருக்கும் தெரியும்.

5-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் ஆர்.கே.நகரில் வேட்புமனு தாக்கல் செய்யவிருக் கும் நிலையில், எங்களை எதிர்த்துப் போட்டியிட தைரியமில்லாதவர்கள், இடைத்தேர்தலில் இதுவரை யாருமே பெற்றிராத வெற்றியை பெறச் சபதமெடுத்திருக்கும் எங்களது கனவை சிதைக்க நினைக்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தந்த ஜெயலலிதாவின் செல்வாக்கைக் கண்டு ஆத்திரப் படுகின்ற அரசியல் காந்தாரிகள் தங்களது வயிற்றில் கல்லை எடுத்து குத்திக் கொள்கிறார்கள். ஆனால், அவர்களால் அதிமுக-வின் வெற்றிப் பயணத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்திவிட முடி யாது. கல்யாணம், காதுகுத்து என்றெல்லாம் சொல்லி அழைப் பிதழ், சந்திப்புகள் நடத்திக்கொண்டி ருக்கும் கூட்டம் இப்போது அனுபவிக்கின்ற இந்த மகிழ்ச்சிக்கு ஆயுள் மிகக் குறைவு’’.

மேல்முறையீடு செய்வதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதின் பின்னணியிலும் அரசியல் இருந்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தனவே..?

பொதுவாக, நீதிமன்ற தீர்ப்புகள் மீது அரசியல் சாயம் பூசுவது ஆரோக்கியமான போக்கு அல்ல. நீதியரசர் குமாரசாமி தீர்ப்பு குறித்து அன்றைக்கு அவர்கள் வைத்த குற்றச்சாட்டில் அணு அளவும் உண்மையில்லை. இன்றைக்குக்கூட பொன்.ராதா கிருஷ்ணன் சட்டமன்றத் தேர்தலில் தங்கள் தலைமையிலான கூட்டணி தான் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்று சொல்லி இருக்கிறார். ஆர்.கே.நகரில் வேட் பாளர் நிறுத்துவது குறித்து இரண்டு நாட்களில் முடிவெடுக் கப்படும் என தமிழிசை சொல் கிறார். இதிலிருந்தே, அன்றைக்கு எதிர்க்கட்சிகள் வைத்த குற்றச் சாட்டுகள் அடிப்படையற்றது; அபத்தமானது என்பது புரியும்.

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்கிறாரே பாமக நிறுவனர் ராமதாஸ்?

ஜெயலலிதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டால் சந்தடிச் சாக்கில் தனது மகனை கோட்டைக்கு அனுப்பி விடலாம் என கனவு காண்கிறார் ராமதாஸ். அதனால், அவர் எங்கள் மீது தொடர்ந்து அம்புகளை எறிந்து கொண்டே இருக்கிறார். வட மாவட்டங்களில் மட்டுமே கட்சி நடத்திக் காலம் தள்ளும் ராமதாஸ், 44.3 சதவீத வாக்குகளை வைத்திருக்கின்ற அதிமுக மீது மோதுவது முட்டை பாறையின் மீது மோதுவதற்கு சமம். ராமதாஸ்களின் முகாரி எல்லாம் எங்களை எதுவும் செய்துவிடாது.

சொத்துக் குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள அதிமுக தயாராக இருக்கிறதா?

நிச்சயமாக.. எங்களுக்கு பயமில்லை. அரசியல் ரீதியாக ஜெயலலிதாவை எதிர்கொள்ள துணிவில்லாதவர்கள் இப்படி யெல்லாம் தந்திரம் செய்து பார்க்கிறார்கள். அண்டங்காக் கைகள் ஆகாயத்தை அழுக்காக்கி விட முடியாது. மேல்முறையீட்டு வழக்கை சட்டப்படி எதிர்கொள் வோம். நியாயத்தின் வாசல் எங்களுக்காக எப்போதும் திறந்திருக்கிறது. இறுதி வெற்றி எங்களுக்குத்தான்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக போட்டியிடாமல் ஒதுங்கியது குறித்து..?

ஏற்கெனவே ஏற்காட்டில் அடிவாங்கினார்கள். ஸ்ரீரங்கத்தில் அனுபவித்தார்கள். ஆர்.கே.நகரி லும் அடி வாங்கினால் அடுத்து வரவிருக்கும் பொதுத் தேர்தலில் படுதோல்வி அடைவதற்கு அதுவே அச்சாரமாக அமைந்துவிடும் என்கிற அச்சம். அதனால் போட்டியிடாமல் பதுங்கிவிட்டார்கள். அதனால்தான், இந்திராவிடம் அரசியல் செய்த கருணாநிதி, சக்கரவர்த்தி ராஜ கோபாலாச்சாரியாரிடமும் கர்மவீரர் காமராஜரிடமும் அரசியல் செய்த கருணாநிதி பாவம்.. இப்போது டிராஃபிக் ராமசாமிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளி யாகி இத்தனை நாட்கள் மவுனமாக இருந்தவர்கள், தற்போது மேல் முறையீடு முடிவுக்கு வந்திருப்பதன் பின்னணியில் அவர்களுக்கு யாரோ அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள், அவர்களை நிர்பந்தித்திருக் கிறார்கள். ஏன்.. நெருக்கடிகூட கொடுத்திருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x