Published : 14 Jun 2015 11:17 AM
Last Updated : 14 Jun 2015 11:17 AM
சிந்தாதிரிப்பேட்டையில் மெட்ரோ ரயிலுக்கு சுரங்கம் தோண்டியபோது 5 வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. ஒரு வீட்டின் கதவு 2 அடி ஆழத் துக்கு பூமியில் புதைந்தது. அங்கு குடி யிருந்த 14 பேர் அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர். சுரங்கப் பணி தற் காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் வண்ணாரப் பேட்டை முதல் விமான நிலையம் வரை, சென்ட்ரலில் இருந்து பரங்கி மலை வரை என 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக நடக்கின்றன. நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் பணி நடந்தபோது, சிந்தா திரிப்பேட்டை அய்யாவு முதலி தெருவில் சில வீடுகளில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இவை சுதர் சனம் என்பவருக்கு சொந்த மானவை. தரைத்தளத்தில் 3 வீடு களும், முதல் மாடியில் 2 வீடுகளும் உள்ளன. தரைத்தளத்தில் நடுவில் உள்ள வீட்டின் கதவு, பூமிக்குள் 2 அடி ஆழத்துக்கு புதைந்ததாக கூறப்பட்டது. இதனால், கதவை திறப்பதும் அவர்களுக்கு சிரமமாக இருந்தது. வீட்டில் ஆங்காங்கே விரி சல் இருந்ததால், அங்கு வாடகைக்கு வசிக்கும் முத்துகிருஷ்ணன் மற் றும் சாமிகேசவனின் மனைவி ராஜகுமாரி ஆகியோர் பயந்து வெளியே ஓடிவந்துவிட்டனர்.
இறங்கிய வீட்டுக்கு பூட்டு
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு தகவல் கொடுக் கப்பட்டது. மெட்ரோ ரயில் அதிகாரி களும், மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வை யிட்டனர். பாதுகாப்பற்ற நிலையில் இருந்த வீடுகள் உடனே பூட்டப் பட்டன. அங்கு வசிப்பவர்களை உள்ளே அனுமதிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். அங்கு இருந்த 14 பேரும் திருவல்லிக்கேணியில் தற்காலிகமாக தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுபற்றி வீட்டின் உரிமையாளர் சுதர்சனம் கூறியபோது, ‘‘இந்த கட் டிடம் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. 5 பேர் வாடகைக்கு வசிக்கின்றனர். தரை தளம் 2 அடிக்கு மேல் பூமியில் இறங்கிவிட்டதாக குடியிருப்பவர்கள் கூறினர். வீட் டுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் சரிசெய்து தரவேண்டும்’’ என்றார்.
பணிகள் நிறுத்தம்
இதுகுறித்து மெட்ரோ ரயில் அதி காரிகளிடம் கேட்டபோது, ‘‘மண் பரிசோதனை உள்ளிட்ட ஆய்வு களை பல கட்டமாக மேற்கொண்டு தான் மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது. சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் பணிகள் நடக்கும் நேரத்தில், சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசல் அடைந்த வீடுகளை பார்வையிட்டோம். அங்கு குடியிருந்தவர்களை வேறு இடத் தில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. எவ்வித பாதிப்பு ஏற்பட் டுள்ளது என்பதை ஆய்வு செய்து அதை முழுமையாக சரிசெய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப் படும்’’ என்றனர். அங்கு மெட்ரோ பணிகள் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளன.
நில அதிர்வு சோதனை?
பூமிக்கு அடியில் சுரங்கப்பாதை பணிகளைத் தொடங்கும் முன்பு அப்பகுதியில் உள்ள கட்டிடங்களை ஒரு குழு ஆய்வு செய்யும். அங்கு உள்ள பழுதடைந்த கட்டிடங்களை கவனத்தில் கொண்டு, அங்கு நில அதிர்வு கருவிகள் பொருத்தப் படும். பணிகள் ஆரம்பிக்கும் முன்பு கட்டிடத்தின் நிலை, பணி நடக்கும் போது கட்டிடத்துக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றை இந்த கருவி பதிவு செய்துகொண்டே வரும். பாதிப்பு ஏற்படுவது தெரிந்தால், கட்டிட உரிமையாளருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வேறு இடத்துக்கு செல்ல அறிவுறுத்தப்படுவார்கள். மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் இதுபோல 50 நில அதிர்வு கருவிகள் உள்ளன.
சிந்தாதிரிப்பேட்டையில் இக் கருவி பயன்படுத்தப்படவில்லையா என்று மெட்ரோ ரயில்வே அதிகாரி களிடம் கேட்டதற்கு, ‘‘வழக்கம் போல, ஆய்வு நடத்திய பிறகுதான் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கினோம். பழைய கட்டிடம் என்பதால் திடீரென விரிசல் ஏற் பட்டுள்ளது’’ என்றனர். வீட்டுக்கு கீழே பெரிய பாறைகள் இருந்திருக் கலாம் என்றும் கூறப்படுகிறது.
தரைத்தளத்தில் நடுவே உள்ள வீடு அதிக அளவில் சேதம் அடைந் துள்ளது. இதனால், உள்ளே சென்று கட்டில், பீரோ, டிவி, பெரிய பாத் திரங்கள் உள்ளிட்ட எந்த பொருளை யும் எடுக்கமுடியவில்லை.
கட்டிடம் முழுவதும் ஆங் காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதால், மற்ற வீடுகளில் இருக்கும் பொருட்களை எடுக்கவும் தயங்கு கின்றனர். இதனால், வீடுகளுக்குள் எல்லா பொருட்களும் அப்படியே இருக்கின்றன.
அதிகாரிகள் அலட்சியம்?
மெட்ரோ ரயில் பணிகள் நடப்ப தால் சிந்தாதிரிப்பேட்டை பகுதி யில் கடந்த ஒரு வாரமாகவே அவ் வப்போது அதிர்வுகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வீடுகள் அதிர்வதாக கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட அப்பகுதியினர் புகார் கூறியுள்ளனர். 2 நாட்களில் சரியாகி விடும் என மெட்ரோ ரயில் அதிகாரி கள் தெரிவித்ததாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.
அதிகாரிகள் அலட்சியம் காட் டாமல் உடனே கவனித்திருந்தால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டிருக்காது என்கின்றனர் அப்பகுதியினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT