Published : 24 Jun 2015 08:08 AM
Last Updated : 24 Jun 2015 08:08 AM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: பிரச்சாரம் நாளையுடன் முடிவடைகிறது - வெளியாட்கள் வெளியேற உத்தரவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. அப்போது முதல் அத்தொகுதி யில் உள்ள வெளிநபர்கள் போலீஸார் உதவியுடன் வெளியேற்றப்படுவர் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு 27-ம் தேதி இடைத்தேர்தல் நடை பெறுகிறது. முதல்முறையாக இந்தத் தேர்தலில், விதிமீறல் புகார்களை ஒருங்கிணைக்க ‘இ-நேத்ரா’ என்ற முறையை தேர்தல் ஆணையம் அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் செயல் பாடு குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று கூறியதாவது:

தேர்தல் நிகழ்வுகளை கண் காணிக்க ஏற்கெனவே 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது மேலும் 4 கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளன. தேவை ஏற்பட்டால் மேலும் அதிகரிக்கப்படும்.

தேர்தல் தொடர்பாக ‘இ-நேத்ரா’வில் இதுவரை 70 புகார்கள் வந்துள்ளன. இவற்றில் 60 புகார்கள் வாக்காளர் பட்டியல் தொடர்பானவை. 9 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு புகாரில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பால் விநியோகிப்பவர் மற்றும் செய்தித்தாள் போடுபவர் மூலம் பணப் பட்டுவாடா நடப்பதாக புகார்கள் வரும் என்பதால், இந்த முறை அவர்களை முன்கூட்டியே எச்சரித்துள்ளோம்.

ஆர்.கே.நகரில் உள்ள மொத்த வாக்காளர்களில் 38 ஆண்கள், 22 பெண்கள் மத்திய பணியில் இருப்பவர்கள். தேர்தல் பாது காப்பு பணியில் 987 தமிழக போலீஸார் ஈடுபடுத்தப்படுகின் றனர். தற்போது வரை 5 கம்பெனி, அதாவது 720 துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர். வாக்குப்பதிவுக்கு 265 கட்டுப் பாட்டு இயந்திரங்களுடன் 530 மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள் பயன்படுத்தப்படு கின்றன.

வாக்குப்பதிவு முழுவதும் ‘வெப் கேமரா’ மூலம் பதிவு செய்யப்படும். 22 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப் பட்டுள்ளன. 25-ம் தேதி (நாளை) மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிகிறது. அதன்பின் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் தவிர பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வெளியேறிவிட வேண்டும்.

இவ்வாறு சந்தீப் சக்சேனா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x