Published : 09 Jun 2015 08:29 AM
Last Updated : 09 Jun 2015 08:29 AM

தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை: ஆர்.கே.நகரில் போட்டியிட்டு உழைப்பையும் நேரத்தையும் வீணாக்க விரும்பவில்லை - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எங்கள் உழைப்பை யும் நேரத்தையும் வீணாக்க விரும்பவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ‘தி இந்து’ விடம் நேற்று அவர் கூறியதாவது:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக கூட்டணி கட்சி களுடன் பேச்சு நடத்தினோம். தேமுதிக தலைவர் விஜயகாந் துடன் இருமுறை விவாதித்தோம்.

ஆர்.கே.நகர் எம்எல்ஏவாக இருந்த வெற்றிவேல் திடீரென ராஜினாமா செய்கிறார். எப்போதும் இல்லாத நடை முறையாக 10 நாட்களுக்குள் இடைத்தேர்தல் அறிவிக்கப் படுகிறது.

இடைத்தேர்தல்களில் ஆளுங் கட்சியின் பண பலமும், அதிகார பலமும் எவ்வாறு வேலை செய்யும் என்பதை ஸ்ரீரங்கத்தில் நேரடியாக எதிர்கொண்ட அனுபவம் எங்களுக்கு உண்டு. பொதுத்தேர்தலைவிட பல மடங்கு உழைப்பையும், நேரத்தையும் இடைத்தேர்தல்களில் செலவிட வேண்டியுள்ளது. ஆனால், அதற்கான பலன் கிடைப்பதில்லை. இடைத்தேர்தலில் கிடைக்கும் வாக்குகள் கட்சிக்கான உண்மை யான பலத்தை வெளிப் படுத்துவதில்லை.

எனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடு வதால் எந்தப் பலனும் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இன்னும் 10 மாதங்களில் பொதுத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அங்கு போட்டியிட்டு எங்கள் உழைப்பையும், நேரத் தையும் வீணாக்க விரும்பவில்லை.

போட்டியிடாமல் ஒதுங்குவ தால் நாங்கள் பயந்து விட்டதாக யாரும் நினைத்துவிடக் கூடாது. உள்ளாட்சி இடைத்தேர்தலிலும், ஸ்ரீரங்கத்திலும் ஆளுங்கட்சியின் அராஜகத்தை எதிர்த்து நின்றதை நினைவுகூர விரும்புகிறேன்.

கட்சிகள் புறக்கணிப்பு

தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் போட்டி போட வேண்டும். அதுதான் உண்மையான ஜன நாயகத்தின் அடையாளம். ஆனால், தமிழகத்தில் இடைத் தேர்தல் என்றால் போட்டி போட்டுக் கொண்டு கட்சிகள் புறக்கணிக்கின்றன. இது ஜனநாயகத்துக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் விடப்பட்ட சவாலாகும். முழுக்க முழுக்க மாநில அரசு அதிகாரிகளை நம்பியிருப்பதால் தேர்தல் ஆணையம் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆர்.கே. நகரில் இப்போதே ஆளுங் கட்சியின் அத்துமீறல்கள் தொடங்கிவிட்டன. இதைத் தடுக்க தமிழக தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணை யரிடம் புகார் தெரிவிப்போம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்த இறுதி முடிவை ஓரிரு நாளில் அறிவிப்போம்.

இவ்வாறு தமிழிசை கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x