Last Updated : 07 Jun, 2015 10:26 AM

 

Published : 07 Jun 2015 10:26 AM
Last Updated : 07 Jun 2015 10:26 AM

மாற்று இயக்கத்தில் இருந்தாலும் அம்மா - மகன் உறவு என்றும் பாதித்தது இல்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இனியன் சம்பத் உருக்கம்

வெவ்வேறு அரசியல் இயக்கங் களில் இருந்தபோதும், அம்மா - மகன் உறவில் எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை என்று தனது தாயார் சுலோச்சனா சம்பத் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உருக்கமாக கூறினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் தாயாரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான சுலோச்சனா சம்பத், சென்னையில் நேற்று கால மானார். தாய்க்கும் மகனுக்குமான உறவு குறித்து ‘தி இந்து’வுக்கு இளங்கோவன் அளித்த பேட்டி:

உங்கள் தாயாரும் நீங்களும் வெவ்வேறு அரசியல் களத்தில் இயங்கினீர்கள். அவரது இழப்பு உங்களை எப்படி பாதித்துள்ளது?

நாங்கள் வெவ்வேறு இயக்கத் தில் இயங்கினோம். அது அரசியல் தளம். எங்கள் கொள்கைகளில் பிடிப்புடன் இருந்தோம். ஆனால், வீட்டுக்குள் என்று வரும்போது, எல்லா வீட்டிலும் அம்மா-மகன் உறவு எப்படி இருக்குமோ அப்படித்தான் எங்கள் வீட்டிலும் இருந்தது. அந்த உறவில் எந்த பாதிப்பும் இருந்ததில்லை. ஒரு தாயின் மரணம் பிள்ளைக்கு பேரிழப்புதானே.

உங்கள் தாயார் சார்ந்த இயக் கத்தை நீங்கள் கடுமையாக விமர்சித் தீர்கள். உங்கள் தாயாரும் உங்களை விமர்சித்தார். அது குடும்பத்தில் சிக்கலை ஏற்படுத்தவில்லையா?

நான் முன்பே சொன்னதுபோல அரசியல் வேறு, குடும்பம் வேறு. இதை எங்கள் குடும்பத்தினர் தெளிவாகவே புரிந்து வைத்திருந் தனர். அதனால் கொள்கைக்காக விமர்சித்துக் கொண்டாலும் வீட்டுக்குள் நல்லபடியாகத்தான் இருந்தோம். குடும்பத்தில் எந்தச் சிக்கலும் இல்லை.

நீங்கள் காங்கிரஸ் கட்சியை தேர்வு செய்தபோது, உங்கள் தாயார் எதிர்த்தாரா?

அப்படி எதுவும் இல்லை. எனது குடும்பமே காங்கிரஸ் பாரம் பரியத்தைக் கொண்ட குடும்பம் தான். ஆகவே, அடிப்படையில் எனது தாயாருமே காங்கிரஸ்காரர் தான். அதனால் என்னை எதிர்த்ததில்லை.

உங்கள் தாயாரை அடிக்கடி சந்திப் பீர்களா? அப்படி சந்தித்தால் என்ன பேசுவீர்கள்?

நான் காங்கிரஸ் இயக்கத் தில் வேகமாக ஓடிக்கொண்டிருக் கிறேன். எனது அம்மா அரசுப் பொறுப்பில் இருந்தவர். அவரும் தீவிர அரசியலில் ஈடுபட்டவர். ஆகையால், அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகள் இருந்ததில்லை. ஆனால் பண்டிகை காலங்கள், வீட்டு விசேஷங்கள் தவிர முக்கிய சந்தர்ப்பங்களில் சந்திப்பேன். அப்போது குடும்ப விஷயங்களைப் பற்றி பேசுவோம்.

உங்கள் தாயார் பற்றிய மறக்க முடியாத நினைவு ஏதாவது இருக்கிறதா?

சிறு வயது முதல் இன்று வரை நிறைய நினைவுகள் இருக்கின் றன. 1984-ம் ஆண்டு அதிமுக காங்கிரஸ் கூட்டணி உருவான போது, எனது தாயார் எனக்காக பிரச்சாரம் செய்தார். அன்று அரசியல் களத்தில் மகனுக்காக அவர் பேசிய வார்த்தைகளை எப்படி மறக்க முடியும்.

அரிதாகவே துக்க நிகழ்வுகளில் பங்கேற்கும் முதல்வர் ஜெயலலிதா, உங்கள் தாயாருக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளாரே?

எனது தாயார் அதிமுகவில் நீண்டகாலம் இருந்தவர். கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். அவருக்கு ஜெயலலிதா நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். இதை மனிதத் தன்மையோடு செய் யப்பட்ட செயலாகவே பார்க் கிறேன். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

இனியன் சம்பத்

சுலோச்சனா சம்பத்தின் இளைய மகன் இனியன் சம்பத் கூறியதாவது: கொள்கை பிடிப்பு கொண்ட அரசியல்வாதி என்பதைபோலவே, தனது பிள்ளைகள் மீது அன்பும் பாசமும் கொண்ட குடும்பத் தலைவியாகவும் திகழ்ந்தவர் எங்கள் அன்னை. எனது அண்ணன் இந்திய தேசியம் பேசுபவர்; நான் தமிழ் தேசியம் பேசுபவன்; எனது தாயார் திராவிட தேசியத்தை பேசியவர். இந்த முரண்பாடு குடும்பத்தில் எதிரொலித்தது கிடை யாது. இன்றுவரை முக்கிய நிகழ்வு களில் கூடிப்பேசி ஒன்றாகத்தான் முடிவெடுக்கிறோம்.

1970-ல் பெரியார் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது அம்மா, அப்பாவுடன் அவரைக் காண சென்றிருந்தேன். அப்போது, பெரியாரின் கையைப் பிடித்து ரேகை பார்த்தேன். அவரோ, ‘குரங்குக்குகூட ரேகை இருக்கிறது. அதுக்கும் ஆரூடம் சொல்வாயா’ என்று கேட்டார். ‘தாத்தா சரியான குட்டு வைத்தாரா’ என்று அம்மாவும், அப்பாவும் என்னிடம் கேட்டதும் அண்ணன் உட்பட அனைவரும் நெடுநேரம் சிரித்தார்கள். அந்த நிகழ்வை இன்றளவும் மறக்க முடியாது.

இவ்வாறு இனியன் சம்பத் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x