Published : 21 Jun 2015 08:57 AM
Last Updated : 21 Jun 2015 08:57 AM

தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.1,214 கோடியில் புதிய கட்டிடங்கள், பாலங்கள்: முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.1,214 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள், பள்ளிகள் மற்றும் பாலங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் ஒரு கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

காஞ்சிபுரம், அரியலூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருப்பூர், திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ரூ.62 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 35 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியா குமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல் பெரம்பலூர், புதுக் கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சி, வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ரூ.7 கோடியே 54 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 75 ஊராட்சி அலுவலகக் கட்டிடங்கள் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.

5 சேவை மையங்கள்

அரியலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம் பலூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவாரூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ரூ.24 கோடியே 72 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 193 கிராம ஊராட்சி சேவை மையங்கள், அரியலூர் மாவட்டம் தா.பழுதூர், திருமானூர், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடு துறை, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஆகிய இடங்களில் ரூ.1 கோடியே 33 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 5 வட்டார ஊராட்சி சேவை மையங்களையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

10 பாலங்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங் கொளத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை, வேலூர் மாவட்டம் வாலாஜா, கே.வி.குப்பம் மற்றும் அரியலூர் ஆகிய இடங்களில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிக் கட்டிடங்கள், சிவகங்கை மாவட்டம் கல்லல், காளையார்கோவில், திருப்பத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் நீலகிரி ஆகிய இடங்களில் ரூ.68 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 5 சமுதாயக் கூடங்கள், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம், வேப்பனஹள்ளி, சேலம் மாவட்டம் வாழப்பாடி, அயோத்தியா பட்டணம், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, இளையான்குடி, திருச்சி மாவட்டம் மணிகண்டம், விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தி யம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் ரூ.13 கோடியே 27 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 10 பாலங்களும் திறக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம் மொடக் குறிச்சி ஒன்றியத்தில் புதூர், ராமநாதபுரம் ஒன்றியத்தில் தேவிபட்டினம், பல்லடம் ஒன்றியத்தில் கோடங்கிபாளையம், விருது நகர் ஒன்றியத்தில் கோட்டையூர் ஆகிய இடங்களில் ரூ.6 கோடியே 28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 4 பேருந்து நிலையங்கள் என தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மொத்தம் ரூ.1,214 கோடியே 18 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ப.மோகன், எஸ்.பி.வேலு மணி, தலைமைச் செயலாளர் கு.ஞான தேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இயக்குநர் கா.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x