Published : 10 Jun 2015 08:06 AM
Last Updated : 10 Jun 2015 08:06 AM

ஜூன் 14 தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாடு

உலகத் தமிழர் பேரமைப்பின் 8-வது மாநாடு ஜூன் 14-ம் தேதி தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற உள்ளது என்றார் அதன் தலைவர் பழ.நெடுமாறன்.

உலகத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு என்ற தலைப்பில் காலை 9 முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் மாணவர் ஆய்வரங்கம்; உலகத் தமிழரும் ஐ.நா.வும்; தமிழர் வளங்கள் பறிபோகும் உரிமைகள் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம், அயலகத் தமிழர் ஆய்வரங்கம், நூல்கள் வெளியீடு, இரா.செழியன், தமிழண்ணல், ச.வே.சுப்பிரமணியம், க.ப.அறவாணன் ஆகியோருக்கு ‘உலகப் பெருந்தமிழர் விருது’ வழங்கல், இசையரங்கம், மாநாட்டு உரை ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இதில், அரசியல் கட்சி பிரமுகர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள், ஊடகத் துறையினர், திரைப்படத் துறையினர், அயலகத் தமிழர்கள், தமிழ் ஆர்வலர்கள், உணர் வாளர்கள் பங்கேற்கின்றனர் என நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x