Published : 12 Jun 2015 11:04 AM
Last Updated : 12 Jun 2015 11:04 AM

ரூ.1,400 கோடியில் சூரிய மின் உற்பத்தி திட்டம்: தமிழக அரசுடன் அதானி குழுமம் ஒப்பந்தம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ரூ.1400 கோடி செலவில் 200 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க தமிழக அரசுடன் அதானி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

அனல், புனல் மற்றும் அணு மின்சக்தியை காட்டிலும் புதுப் பிக்கத்தக்க எரிசக்தி உற்பத் தியை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்து தற்போது மேலோங்கி வருகிறது. தமிழகத் தில் ‘சூரியமின்சக்தி கொள் கை’யை கடந்த 2012-ம் ஆண்டில் முதல்வர் ஜெயலலிதா அறிமுகப் படுத்தினார். இந்த கொள்கையின் படி ஆண்டுக்கு 1000 மெகாவாட் மின்சாரம் சூரிய சக்தி மூலம் பெறுவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பொதுமக்களும் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை இந்த திட்டத்தில் உற்பத்தி செய்யலாம். அரசு தனியார் நிறுவன கட்டிடங் கள், பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக கட்டிடங்களில் சூரிய மின் உற்பத்தி என பல்வேறு திட்டங்கள் இக்கொள்கையில் இடம் பெற்றன.

இதில் தற்போது அரசு கட்டிடங் கள், கல்லூரி, பல்கலைக்கழக கட்டிடங்களில் சூரிய மின் உற்பத் திக்கான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

சூரிய மின் உற்பத்திக்கு தேவை யான உதவிகளை அரசும் செய்து வருகிறது. உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற் றும் பகிர்மானக்கழகம் வாங் கிக்கொள்கிறது. 2016 மார்ச்சில் 631 மெகாவாட் மின்சாரத்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் நண்பர் கவுதம் அதானியின் நிறுவனமான அதானி குழுமம், தமிழக அரசுடன் சூரிய மின்சக்தி தொடர்பாக ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கெனவே பெரும்பான்மை வெப்பம் நிலவும் மாநிலமான ராஜஸ்தான் மாநிலத்தில் சூரிய மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவியுள்ள இந்த நிறுவனம், தற்போது தமிழகத்தில் அதிக வெப்பம் நிலவும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தன் உற்பத்தி மையத்தை நிறுவ முடிவெடுத் துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் இதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் 5,000 ஏக்கர் பரப்பில் மின் உற்பத்தி மையத்தை அமைக்க முடிவு செய்துள்ள இந்த நிறுவனம், ஒரு மெகா வாட்டுக்கு ரூ.7 கோடி வீதம் 200 மெகாவாட்டுக்கு ரூ.1,400 கோடியை முதலீடு செய்கிறது. மேலும், தொடர்ந்து 1,000 மெகாவாட் வரை உற்பத்தி திறனை மேம்படுத்தவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேவையான நிலம் கிடைத்ததும் அடுத்த சில மாதங்களில் பணிகளை நிறுவனம் தொடங்க உள்ளது.

இதுகுறித்து எரிசக்தித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தற்போதைய சூழலில் சூரிய மின்னுற்பத்தியில் தமிழகம் தேசிய அளவில் 7-ம் இடத்தில் உள்ளது. தற்போது வெல்ஸ்பென் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமிழக அரசுடன் சூரிய மின் உற்பத்திக்காக ஒப்பந்தம் செய்துள்ளன.

செப்டம்பர் மாதம் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் சந்திப் பில், சூரிய மின் உற்பத்திக்கு முக் கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதில் மேலும் பல நிறுவனங் கள் முதலீடு செய்யும் என நம்பு கிறோம்.

ராமநாதபுரம் தவிர தூத்துக் குடி உள்ளிட்ட பகுதிகளிலும் சூரிய மின்சக்தி உற்பத்தி மையங் கள் வர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x