Published : 29 Jun 2015 10:35 AM
Last Updated : 29 Jun 2015 10:35 AM

அறிவியல் கல்வி ஆராய்ச்சி மையம் திருப்பதியில் அமைகிறது: இயக்குநர் ராமகிருஷ்ணன் தகவல்

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி மையம் விரைவில் அமைய உள்ளதாக இம்மையத் தின் இயக்குநர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருவனந்தபுரம் இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

அடிப்படை கல்விக்கான கட்டமைப்புகள் வெளிநாடுகளில் உள்ளது போல இந்தியாவில் இல்லை. மேலும் இந்திய மாணவர்களின் திறமையைக் கண்டறியவும், ஊக்குவிக்கவும் பெற்றோரும், ஆசிரியர்களும் பெரும்பாலும் ஆர்வம் காட்டுவ தில்லை.

சமூக பொருளாதார சூழலால் 90 சதவீத மாணவர்கள் முடங்கிப் போனாலும், மீதமுள்ள 10 சதவீத மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிக்கவேண்டும்.

தலைசிறந்த அறிவியல் கல்வியைக் கற்க அறிவியல் நிறுவனம் இல்லை என்ற குறையைப் போக்க மத்திய அரசால் இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி மையம் 2006-ம் ஆண்டு கொல்கத்தா, புனேயிலும், 2007-ம் ஆண்டு மொகாலியிலும், 2011-ம் ஆண்டு திருவனந்தபுரம், போபாலிலும் நிறுவப்பட்டன.

அடுத்தகட்டமாக ஆந்திர மாநிலம் திருப்பதியில் விரைவில் தொடங்கப்படவுள்ளது. அறிவி யல் படிப்பவர்கள் சர்வதேச அள விலான ஆராய்ச்சி பணிக்காகவே வெளிநாடு செல்கின்றனர். தொலைநோக்கு பார்வை உள்ள வரால் மட்டுமே அறிவியல் ஆராய்ச்சியாளராக முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கல்லூரி செயலாளர் செந்தில்குமார், இயக் குநர் கஸ்தூரிபாய் தனசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x