Published : 02 Jun 2015 07:12 AM
Last Updated : 02 Jun 2015 07:12 AM

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கோடை விடுமுறையில் 3.88 லட்சம் பேர் வருகை: கடந்த ஆண்டைவிட அதிகம்

கோடை விடுமுறையில் வண்ட லூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு 3 லட்சத்து 88 ஆயிரம் பார்வையாளர்கள் வந்துள்ளனர்.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 602 ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை எழிலுடன் விரிந்து கிடக்கிறது. இங்கு 46 இனங்களைச் சேர்ந்த 404 பாலூட்டிகள், 74 இனங்களைச் சேர்ந்த 762 பறவைகள், 32 இனங்களைச் சேர்ந்த 313 ஊர்வன என மொத்தம் 152 இனங்களைச் சேர்ந்த 1,479 விலங்குகள் உள்ளன. இவற்றை பார்வையிட குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த பூங்காவில் கோடை விடுமுறையையொட்டி ஒவ்வொரு மே மாதமும், பூங்கா வின் விடுமுறை நாளான செவ் வாய்க்கிழமையும் திறக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு கோடை விடுமுறையில் மே மாதத்தில் 3 லட்சத்து 83 ஆயிரத்து 367 பார்வையாளர்கள் வந்திருந்தனர். இந்த ஆண்டு மே மாதத்தில் 3 லட்சத்து 88 ஆயிரத்து 557 பார்வையாளர்கள் வந்துள்ளனர். இந்த ஆண்டு 5 ஆயிரத்து 190 பார்வையாளர்கள் அதிகரித் துள்ளனர்.

இது தொடர்பாக பூங்கா அதி காரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘இந்த ஆண்டு நடுநடுவே கோடை மழை பெய்து, பல நாட்கள் குளிர்ச் சியான சூழல் நிலவியது. இதனால் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x