Published : 05 Jun 2015 10:10 AM
Last Updated : 05 Jun 2015 10:10 AM

விதை நெல்லுக்கான கொள்முதல் விலை சரிவு: உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதிருப்தி

கடந்த ஆண்டைவிட விதை நெல் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.10 வரை குறைந்துள்ளதால் விதை நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

தமிழக அரசின் வேளாண் மைத் துறை சார்பில் ஒவ்வொரு பருவத்தின்போதும் விவசாயி களுக்குத் தேவையான சான்றளிக் கப்பட்ட விதை நெல் விற்பனை செய்யப்படுகிறது.

விதை தேவையை அரசின் விதைப் பண்ணைகளால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியாது என்பதால் விதைச் சான்றுத் துறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு ஆதார விதையை வழங்கி, அவர்கள் உற்பத்தி செய்த விதையை கொள் முதல் செய்து வேளாண்மைத் துறை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த நடைமுறை நெல்லுக்கு மட்டுமல்லாது உளுந்து, பயறு உள்ளிட்ட பல்வேறு தானி யங்களுக்கும் கடைப்பிடிக்கப் படுகிறது.

தமிழகம் முழுவதும் ஏராளமான விவசாயிகள் பதிவு செய்து விதையை உற்பத்தி செய்து அரசுக்கு வழங்கி வருகின்றனர். இந்தநிலையில், பிபிடி 5204 (ஆந்திரா பொன்னி) ரக விதை கடந்த ஆண்டு கிலோ ரூ.32.60-க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், தற்போது ரூ.24.60 கொள்முதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் விதைச் சான்றுத் துறையிடம் ஏக்கருக்கு ரூ.180 கட்டணத்தை செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். விதைக்கும் நாள் முதல் அறுவடை வரை வேளாண்மைத் துறை அலுவலர் களின் நேரடி மேற்பார்வையில் இந்த விதை நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. 20 சதவீத ஈரப் பதத்துடன் அறுவடை செய்யப்படும் இந்த விதை நெல், விதை சுத்திகரிப்பு மையத்தில் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, முளைப்புத்திறன் பரிசோதிக்கப்பட்டு, அதன் பின்னரே விதையாக கொள்முதல் செய்யப்படுகிறது.

விதையை உற்பத்தி செய்ய செலவும், கால விரயமும் அதிகம் என்ற நிலையில், கொள் முதல் விலை குறைத்து நிர்ண யிக்கப்பட்டுள்ளதால் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் புலியூர் ஏ.நாகராஜன் ‘தி இந்து’விடம் கூறியபோது, “உரம் மற்றும் இடுபொருட்களின் விலை, விவசாயக் கூலித் தொழி லாளர்களுக்கான கூலி, டீசல் விலை உயர்வு ஆகியவற்றை ஒப்பிடும் போது ஒவ்வொரு ஆண்டும் விதைக்கான விலையை கூடுத லாகத்தான் வழங்க வேண்டுமே தவிர குறைத்து வழங்குவது விவசாயிகளை ஏமாற்றும் செயல்.

விதை சுத்திகரிப்பு மையத்தில் தூய்மை செய்யும்போது விவசாயி களுக்கு ஒரு டன்னுக்கு 200 கிலோ வரை இழப்பு ஏற்படு கிறது. உணவுக்காக உற்பத்தி செய்யப்படும் நெல்லுக்கு செய்யப் படும் செலவைவிட இதற்கு கூடுதலாக செலவாகிறது. எனவே, விதை நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.50-ஐ கொள்முதல் விலையாக வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து வேளாண்மைத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, “அந்தந்த மாவட்டங்களில் நிலவும் சந்தை விலையுடன் கூடுதலாக 25 சதவீதம் மற்றும் கிலோவுக்கு ரூ.3 சேர்த்து விதைக் கான கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சந்தை விலை புள்ளியியல் துறையிடமிருந்து பெறப்படுகிறது. இதுதான் அரசின் கொள்கை. கடந்த ஆண்டில் பிபிடி 5204 ரக நெல் விதை விலை கூடுதலாக விற்பனையானது. தற்போது வெளிச்சந்தையில் விலை குறைவாகவே உள்ளது. எனவே, விதை நெல் கொள்முதல் விலையும் குறைவாகவே நிர்ண யிக்கப்பட்டுள்ளது” என்றார்.

தரமான விதையே அதிகமான உற்பத்திக்கு ஆதாரம் என்பதால், விதைக்கான கொள்முதல் விலையை கூடுதலாக வழங்கி தரமான விதை உற்பத்தியை ஊக்கப் படுத்த வேண்டும் என்கின்றனர் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x