Published : 15 Jun 2015 07:34 AM
Last Updated : 15 Jun 2015 07:34 AM

கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைவு: கிருஷ்ணா நீர் இன்றோ நாளையோ நிறுத்தப்படும்

தமிழகத்துக்கு வரும் கிருஷ்ணா நீர் இன்று அல்லது நாளையு டன் நிறுத்தப்படும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. கண்டலேறு அணையில் நீர் இருப்பு மிகவும் குறைவாக இருப்பதால், தமிழக அரசு வேண்டி கேட்டுக்கொண் டாலும் ஓரிரு நாட்களுக்கு மேல் தண்ணீர் தர முடியாது என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.

தற்போது சென்னைக்கு நீர் வழங்கும் கண்டலேறு அணையின் நீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 68.03 டி.எம்.சி. ஆனால், இப்போது 6.53 டி.எம்.சி. நீர் மட்டுமே உள்ளது. இதனால், தமிழக எல்லையான ஊத்துக்கோட் டையில் 215 கன அடி வரை வந்துகொண்டிருந்த நீர் தற்போது 175 கன அடியாக குறைந்துள்ளது.

இது குறித்து தெலுங்கு கங்கை திட்டத்தின் ஆந்திர அதிகாரி தெரிவிக்கும்போது, “தற்போது நீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளதால், அதிக பட்சமாக 2 நாட்களுக்கு மட்டுமே நீர் தர முடியும். தமிழக அரசு கேட்டுக்கொண்டாலும், தருவ தற்கு இங்கு நீர் இல்லை. சைலம் அணையிலும் நீர் இருப்பு குறைவாக இருப்பதால், அங்கிருந்து கண்டலேறுவுக்கு நீர் கொண்டு வர முடியாது” என்று கூறினார்.

சென்னையின் நீர்த்தேக்கங் களில் நீர் இருப்பு குறைந்து கொண்டு வருகிறது. ஜூன் 13-ம் தேதி நிலவரப்படி பூண்டி நீர்த்தேக்கத்தில் 0.173 டி.எம்.சி., புழல் ஏரியில் 0.868 டி.எம்.சி., செம்பரம்பாக்கத்தில் 0.497 டி.எம்.சி. நீர் உள்ளது. மொத்தமாக 1.53 டி.எம்.சி. நீர் உள்ளது. இதே தேதியில் கடந்த ஆண்டு 2.98 டி.எம்.சி. நீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்த போது, “கிருஷ்ணா நீர் ஆந்திரா வில் நிறுத்தப்பட்டாலும், மேலும் 3 நாட்களுக்கு நமக்கு வரும். அதை வைத்து சமாளிக்க முடியும். இன்னும் ஒரு மாதத்தில் மழையும் பெய்ய ஆரம்பித்துவிடும். குடிநீர் பற்றாக்குறையை நீக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x