Published : 23 Jun 2015 07:13 AM
Last Updated : 23 Jun 2015 07:13 AM

பக்கவாத நோயாளிக்கு அரிய அறுவை சிகிச்சை: அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்தது

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பக்கவாத நோயாளிக்கு அரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இது தொடர்பாக ஸ்டான்லி மருத் துவமனையின் ரத்தநாள அறுவை சிகிச்சை துறை தலைவர் ஜி.துளசி குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பொன்னேரியைச் சேர்ந்த வரு வாய்த் துறையில் கிராம உதவி யாளராக பணிபுரியும் கவுதி என்பவர் தொடக்க நிலை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, ஸ்டான்லி மருத்து வமனை நரம்பியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச் சைக்கு அனுமதிக்கப்பட்ட போது, அவரால் கை, கால் களை நினைத்தபடி அசைக்க முடியவில்லை.

பின்னர் அவர் ரத்த நாள அறுவை சிகிச்சை துறைக்கு அனுப்பி வைக் கப்பட்டார். அவரின் உடலை ஆய்வு செய்ததில், இதயத்திலிருந்து மூளைக்குச் செல்லும் 4 ரத்தக் குழாய்களில், இரு குழாய்கள் முழுவதும் கொழுப்பு திசுக்களால் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபட்டிருந்தது தெரியவந்தது.

வழக்கமாக இரு ரத்த குழாய் கள் பிரியுமிடத்தில் மட்டும்தான் அடைப்பு ஏற்படும். அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வார்கள். இது அரிதானது என்பதால், கைக்கு செல்லும் ரத்த குழாயில் இருந்து மாற்று வழியில் மூளைக்கு ரத்தம் அனுப்பப்பட்டது.

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதல்முறை.

இது போன்ற நோய் வராமல் தடுக்க தொடர் மருத்துவ பரி சோதனை அவசியம். ஒருவருக்கு 40 வயதுக்கு மேல் திடீரென கை, கால்களை அசைக்க முடியாமல் போவது, தெளிவில்லாத பேச்சு போன்ற அறிகுறிகள் கண்டுபிடிக்கப் பட்டால் அவரை உறவினர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கும் ஒத்துழைக்க வேண்டும். இதன் மூலம் பக்க வாத நோய் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவமனை முதல்வர் ஐசக் கிறிஸ்டியன் மோசஸ், உள்ளிருப்பு மருத்துவர் எம்.ரமேஷ், ரத்த நாள அறுவை சிகிச்சை துறை உதவி பேராசிரியர் கே.ஜெயசந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x