Published : 15 Jun 2015 09:30 PM
Last Updated : 15 Jun 2015 09:30 PM

பி.சி., எம்.பி.சி., மாணவ, மாணவியருக்கு ரூ.62 கோடியில் விடுதிகள், பள்ளி கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் ரூ.62 கோடியே ஒரு லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விடுதி, பள்ளி கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இதுகுறித்து செய்தி, மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியர் இடைநிற்றல் இன்றி கல்வி கற்றிடவும், அவர்கள் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் நல்வாழ்விற்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் ரூ. ஒரு கோடியே 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் கல்லுாரி மாணவர் விடுதிக் கட்டிடத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும், அரியலுார், திண்டுக்கல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, பெரம்பலுார், புதுக்கோட்டை, சேலம், தேனி, திருச்சி, திருவாரூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலுார், விருதுநகர், நாகை, கடலுார், தருமபுரி, நாமக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ரூ.22 கோடியே 75 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 38 பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவ, மாணவியர் விடுதிகளையும் திறந்தார்.

சிவகங்கை மற்றும் விருதுநகர்- அருப்புக்கோட்டையில் கல்லுாரி மாணவர் விடுதிகள்; திண்டுக்கல் - நிலக்கோட்டை, கொடைக்கானல்; நாகை- மயிலாடுதுறை; புதுக்கோட்டை; திருப்பூர்- உடுமலைப்பேட்டை; திருச்சி- நாவலுார் குட்டப்பட்டு ஆகிய இடங்களில் 6 கல்லுாரி மாணவியர் விடுதிகள்; சேலம்,கடலுார், தருமபுரி, நாமக்கல், திருவாரூர், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் 24 மிக பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் விடுதிகளையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மேலும், புதுக்கோட்டையில் சீர்மரபினர் கல்லுாரி மாணவியர் விடுதி; திண்டுக்கல்- என்.பஞ்சப்பட்டி; தேனி- எ.வாடிப்பட்டியில் சீர்மரபினர் பள்ளி மாணவர் விடுதிகள்; புதுக்கோட்டை- நாகுடி மற்றும் கொத்தமங்கலத்தில் சீர்மரபினர் பள்ளி மாணவியர் விடுதி; திண்டுக்கல்- பேகம்பூரில் சிறுபான்மையினர் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவியர் விடுதி; திண்டுக்கல்லில் கள்ளர் சீரமைப்பு பள்ளி மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள்; தேனி - மேலக்கூடலுாரில் கள்ளர் சீரமைப்பு பள்ளி மாணவியர் விடுதி; மதுரை செக்காணுாரணியில் கள்ளர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடம் என மொத்தம் ரூ.62 கோடியே 1 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இந்த மாணவ, மாணவியர் விடுதிகளில் கிரானைட் சமையல் மேடை, சூரிய ஒளி மூலம் நீரை சூடுபடுத்தும் கருவி, மின்சார புகைபோக்கி, தரைதள தண்ணீர் சேமிப்பு தொட்டி, குளிர்பதன பெட்டி, விடுதி விளக்குகள் மற்றும் மின்விசிறிகளுக்கு மின்சாரம் தயாரிக்க 1 கி.வாட் திறன் கொண்ட சூரிய ஒளி போட்டோ வோல்டிக் பவர் பிளான்ட் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x