Published : 22 Jun 2015 07:21 AM
Last Updated : 22 Jun 2015 07:21 AM

46 யோகா ஆசிரியர்களுக்கு விருது

மாநில அளவில் சிறந்த 46 யோகா ஆசிரியர்களுக்கு சென்னையில் நேற்று விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு விளையாட்டு யோகாசன சங்கம் சார்பில் 18 பெண்கள் உட்பட 46 பேருக்கு சிறந்த யோகா ஆசிரியர்கள் விருது கோடம்பாக்கத்தில் நடைபெற்ற விழாவில் நேற்று வழங்கப்பட்டன. கமலா தியேட்டர் உரிமையாளர் வள்ளியப்பன், மக்கள் குரல் ஆசிரியர் முத்துகுமார் , செயிண்ட் ஜான்ஸ் பள்ளி தாளாளர் பிரவீன் கிரிஸ்டோபர் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். இதில் தமிழ்நாடு விளையாட்டு யோகாசன சங்கத்தின் தலைவர் எம்.பாபு, செயலாளர் மு.ரவி ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x