Published : 19 Jun 2015 07:39 AM
Last Updated : 19 Jun 2015 07:39 AM

ஊரப்பாக்கத்தில் தொடர் கொலைகள் ஏன்? - ரியல் எஸ்டேட் தொழிலின் மறுபக்கம்

சென்னையின் தென் பகுதி வேகமாக வளர்ந்து வரும் அதே வேகத்தில், அங்கே சில ஆண்டுகளாக கொலைகளும் அதிகரித்து வருகிறது. எப்போது என்ன நடக்குமோ? என்கிற அச்சத்துடன் அப்பகுதி மக்கள் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். ஏனெனில், இதுவரை ஊரப்பாக்கம் ஊராட்சி யில் தலைவர்களாக இருந்த 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

2001-ம் ஆண்டு ஊராட்சித் தலைவராக இருந்த மேனகா, ஊராட்சி மன்ற அலுவலகத் திலேயே மர்ம கும்பலால் கொடூர மாக கொலை செய்யப்பட்டார். அவரது கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப் பட்ட குமார், 2010-ம் ஆண்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டும் கொலை செய்யப் பட்டார். அப்போது, குமார் ஊரப்பாக்கம் ஊராட்சித் தலை வராக இருந்தார். இவர் மீது மேனகா கொலை வழக்கு மற்றும் காட்டாங் குளத்தூரில் தேமுதிக பிரமுகர் பாலாஜி கொலை செய்யப்பட்ட வழக்குகள் இருந்தன.

2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போது ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த பெருமாள் கொலை செய்யப்பட்டார். அவரது மறைவுக்குப் பிறகு நடைபெற்ற இடைத் தேர்தலில், அவரது மனைவி சரோஜா போட்டியிட்டு வென்று ஊராட்சி மன்றத் தலை வரானார்.

கடந்த ஜூன் 9-ம் தேதி மதுராந்தகத்தில் வாகன உதிரிபாக கடை வைத்திருந்த சரவணன் அவரது கடையிலேயே கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை விவகாரத்தில் ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவி சரோஜா போலீஸாரால் முக்கியக் குற்ற வாளியாக தேடப்பட்டு வருகிறார்.

ஊரப்பாக்கம் பகுதியில் முக்கிய பிரமுகர்கள் கொலை செய்யப்படுவதன் பின்னணியில் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் கிடைக்கும் பணமே முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

சென்னையை ஒட்டி தென் பகுதியில் வண்டலூரை அடுத்து அமைந்துள்ள கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், காட்டாங்கொளத் தூர், மன்னிவாக்கம், ஆதனூர் ஆகிய பகுதிகள் கடந்த 10 ஆண்டு களில் அசுர வளர்ச்சியடைந்துள் ளன. தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ரூ. 65 ஆயிரத்துக்கு விற்பனையான ஒரு கிரவுண்ட் வீட்டுமனை இப்போது ரூ. 75 லட்சத்தை தாண்டிவிட்டது. நூறு மடங்குக்கு மேல் நிலத்தின் மதிப்பு கூடிவிட்டது.

சென்னையின் போக்குவரத்து நெரிசலிலிருந்து விலகி வாழ நினைப்பவர்கள் இப்பகுதியில் விரும்பிக் குடியேறுவதால் இங்கு ரியல் எஸ்டேட் தொழில் அதீத வளர்ச்சியடைந்துள்ளது. குறிப் பாக, ஊரப்பாக்கம் ஊராட்சியில் ஒரு வீட்டுக்கு அனுமதி வழங்க ரூ. 25 ஆயிரம் வரை கைமாறுவதாக கூறுகின்றனர் கட்டுமானத் தொழி லில் ஈடுபட்டுள்ளவர்கள்.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய குடியிருப்புகள் இங்கு உருவாகியுள்ளன என்றால், வீடு கட்ட அனுமதி கொடுத்த வகையில் கைமாறிய தொகை எவ்வளவு இருக்கும் என கணக்குப் போட்டுக் கொள் ளுங்கள் என்கிறார்கள் அவர்கள்.

கடும் போட்டி

இது தவிர இப்பகுதியில் உள்ள ஏரிகளை தூர்த்து வீட்டு மனை களாக்கி விற்பது மற்றும் புறம் போக்கு நிலங்களை ஆக்கிரமித்து விற்பது என முறைகேடுகளில் ஊராட்சியின் முக்கிய பதவியில் இருப்பவர்களே ஈடுபடுகின்றனர். வருமானம் அதிகம் என்பதால் இந்த ஊராட்சிகளில் முக்கியப் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலில் தோல்வியுற்றவர்கள் எதிரணியைச் சேர்ந்தவர்களை பழி வாங்க கொலை செய்வதுவரை போய்விடுகிறார்கள்.

இந்த ஊராட்சியைப் பொருத்தவரை உள்ளாட்சித் தேர்தல் என்றால் திருமங்கலம் பார்முலாதானாம். உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு கவனிப்பு மிக பலமாக இருக்கும்.

ஊரப்பாக்கம் அருகேயுள்ள மன்னிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் புருசோத்தமன் 2012-ம் ஆண்டும், சேத்துப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதமும், பெரு மாத்துநல்லூர் ஊராட்சித் தலைவர் சம்பத் 2014-ம் ஆண்டும் இதேபோல் ரியல் எஸ்டேட் விவகாரத்தால் படுகொலை செய் யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.

பல்வேறு கல்லூரிகள்

ஊரப்பாக்கம் ஊராட்சியை ஒட்டி 2 கி.மீ தொலைவுக்குள் 7 கல்லூரிகளும், பெரும் மென் பொருள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், பல்வேறு தொழிற் சாலைகளும் அமைந்துள்ளன. கல்லூரி மாணவர்களின் எண் ணிக்கை 25 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது.

அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இந்தப் பகுதி யில் ஏதேனும் பிரச்சினை தொடர் பாக புகார் கொடுக்க வேண்டு மென்றால் 2 கி.மீ. தொலைவிலுள்ள கூடுவாஞ்சேரி காவல் நிலையத் துக்குத்தான் செல்ல வேண்டும். இப்பகுதியில் தனியாக ஒரு காவல் நிலையம் அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் கடந்த சில ஆண்டுகளாகவே அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின் றனர்.

இங்கே ஒரு காவல் நிலையம் அமைந்தால் குற்றச் செயல்களை உடனடியாகத் தடுக்க முடியும் என்றும், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்க முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின் றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x