Published : 27 Jun 2015 09:09 AM
Last Updated : 27 Jun 2015 09:09 AM

பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் ஓ.பி.எஸ். தம்பி உட்பட 7 பேர் பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்

பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா உட்பட 7 பேர் பெரியகுளம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர்.

தேனி மாவட்டம், ஜி.கல்லு பட்டியைச் சேர்ந்தவர் நாகமுத்து. இவர் பெரியகுளம் கயிலாசநாதர் கோயில் பூசாரியாக இருந்தார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த வழக்கில் பெரியகுளம் நகராட்சி முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பியுமான ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சித் தலைவர் பாண்டி, மணிமாறன் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் சாதிப் பெயரைக் கூறி திட்டியதாக ஓ.ராஜா, பாண்டி, மணிமாறன் ஆகியோர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓ.ராஜா கடந்த 24-ம்தேதி தேனி மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றார்.

இதனிடையே, இவ்வழக்கு விசாரணைக்காக ஜுன் 26-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று பெரியகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாரியப்பன் உத்தரவிட்டிருந்தார். இதனால் ஓ.ராஜா, மணிமாறன், சிவக்குமார், லோகு, ஞானம், பாண்டி, சரவணன் ஆகிய 7 பேர் பெரியகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த மாஜிஸ் திரேட் மாரியப்பன் விசாரணையை ஜுலை 4-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x