Published : 07 Jun 2015 09:36 AM
Last Updated : 07 Jun 2015 09:36 AM

இரு சக்கர வாகன பழுதுபார்ப்போர் உண்ணாவிரதத்துக்கு மதிமுக ஆதரவு

மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் முன் னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பி னர் வரும் 10-ம் தேதி நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மதிமுக முழு ஆதரவு தெரிவித்துள் ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசு கொண்டுவரவுள்ள சாலை பாதுகாப்புச் சட்டத்தால், தமிழகத்தில் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் 10 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும். இதனால், அவர்களது குடும்பங்களின் வாழ்வு கேள்விக்குறி ஆகிடும். மேலும், இரு சக்கர வாகனங்களை வைத் திருக்கும் ஒரு கோடிக்கு மேற்பட் டோரும் கடுமையாக பாதிக்கப்படு வர்.

மத்திய அரசு, முதலாளிகளுக் கானது என்பதை மோடி மீண் டும் நிரூபித்துள்ளார். புதிய சட்டத்தின் படி, வாகனத்தை விற்பனை செய்யும் கம்பெனி மட்டும்தான் அதில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்யவும், உதிரி பாகங்களை பொருத் தவும் முடியும்.

இந்தச் சட்டத்தை எதிர்த்து, தமிழ் நாடு இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங் களின் கூட்டமைப்பு சார்பாக வரும் 10-ம் தேதி கவன ஈர்ப்பு அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளனர். அதற்கு மதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x