Published : 18 Jun 2015 07:42 AM
Last Updated : 18 Jun 2015 07:42 AM
மாற்றுத் திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை பிரிவு திட்ட வாகனம், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வாகனத்தின் மூலம் தாலுக்கா வாரியாக மாற்றுத் திறனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளி குழந்தை களுக்கென 32 நடமாடும் சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்படும் என 2013-ம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து, வாகனங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்டங்க ளில் உள்ள மாற்றுத் திறனாளி நல அலுவலகத்துக்கு சென்றடைந் தன. காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வழங்கப்பட்ட நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனம், மாவட்ட ஆட்சியர் சண்முகம் முன்னிலையில், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலரிடம் ஒப்படைக்கப் பட்டது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் வாசுதேவன் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட் டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இதில், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் அரசு உதவித் தொகை பெற்று வருகின்றனர். குறிப்பாக, கால் ஊனத்தினால் பாதிக்கப்பட்ட நபர்களை, காய்ச்சல் மற்றும் வேறு ஏதேனும் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ள காலங்களில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இதனால், மனதளவில் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால், கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளித்தால், நடமாடும் சிகிச்சை பிரிவு வாகன திட்டம் வரவேற்பை பெறும் என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை வட்டாரங்கள் கூறிய தாவது: நடமாடும் சிகிச்சை பிரிவுக்காக வழங்கப்பட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் வடிவிலான வாகனத்தை சுழற்சி முறையில் தாலுகா வாரியாக பணியில் ஈடு படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளின் ஒவ் வொரு குறைபாடுகளுக்கும் ஒருநாள் என அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ உதவி யாளரை அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT