Published : 16 Jun 2015 09:25 AM
Last Updated : 16 Jun 2015 09:25 AM
சென்னை துறைமுகத்தில் ஏற்பட் டுள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் 8 சதவீதம் குறைந்துள்ளது என இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (ஃபியோ) தெரிவித்துள்ளது.
சரக்குகளைக் கையாள்வதில் நாட்டில் உள்ள 2-வது பெரிய துறை முகமாக சென்னை துறைமுகம் திகழ்கிறது. தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், கேரளம் மற்றும் புதுச் சேரி ஆகிய தென் மாநிலங்களைச் சேர்ந்த ஏற்றுமதி, இறக்குமதியாளர் கள் இத்துறைமுகத்தை பயன் படுத்தி வருகின்றனர். ஆண்டொன் றுக்கு சராசரியாக 20 லட்சம் கன் டெய்னர்கள் கையாளப்படுகின்றன.
இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் காரணமாக இத்துறை முகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (Federation of Indian Export Organisations-FIEO) தென் மண்டல இணை துணை பொது இயக்குநர் கே.உன்னிகிருஷ்ணன் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
சென்னை துறைமுகம் வழியாக தோல் பொருட்கள், ஆயத்த ஆடை கள், ரசாயனங்கள், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் மற்றும் பொறியியல் இயந்திரங்களின் உதிரிப்பாகங்கள் ஆகியவை ஏற்று மதி செய்யப்படுகின்றன. இதே போல், உணவுப் பொருட்கள், உரங் கள், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை முக்கிய இறக்குமதி களாக உள்ளன. மாதம் ஒன் றுக்கு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு வர்த்தகம் நடை பெறுகிறது.
இந்நிலையில், சென்னை துறை முகத்துக்கு வெளியேயும், உள்ளே யும் ஏற்படும் போக்குவரத்து நெரி சல் காரணமாக ஏற்றுமதி, இறக்கு மதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள் ளது. முறையான சாலை வசதி இல்லாததே இதற்குக் காரணம். அத்துடன், துறைமுகத்தில் அடிக் கடி ஏதேனும் ஒரு பிரிவினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்ற னர். இதன் காரணமாக, ஒரு கன் டெய்னர் சரக்குப் பெட்டக முனை யத்தில் இருந்து துறைமுகத் துக்குள் செல்வதற்கு சராசரியாக 3 நாட்கள் ஆகின்றன.
இதனால், குறிப்பிட்ட கப்பலில் சரக்குகளை ஏற்றுவதற்குள் அந்தக் கப்பல் புறப்பட்டு சென்றுவிடுகிறது. எனவே, ஏற்றுமதியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
மேலும், சர்வதேச அளவில் ஏற் பட்டுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக இறக்குமதியாளர்கள் சரக்கை முன்கூட்டியே வாங்கி வைப்பதில்லை. தேவைப்படும் நேரத்தில், தேவையான அளவுக்கு மட்டுமே வாங்குகின்றனர். இத னால், அவர்கள் கேட்கும் குறிப் பிட்ட காலத்துக்குள் இங்கிருந்து ஏற்றுமதியாளர்களால் சரக்குகளை ஏற்றுமதி செய்ய முடிவதில்லை.
இதேபோல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களையும் குறிப் பிட்ட காலத்துக்குள் இறக்குமதி செய்ய முடிவதில்லை. இத னால், உணவுப் பொருட்கள் கெட்டுப்போவதோடு, இறக்கு மதியாளர்களுக்கு நஷ்டமும் ஏற்படுகிறது. இத்தகைய காரணங்களால் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி 8 சதவீதம் குறைந்துள்ளது.
அத்துடன், இப்பிரச்சினைகள் காரணமாக ஏற்றுமதியாளர்கள் பிற துறைமுகங்களை நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை துறைமுகம்-மதுர வாயல் உயர்மட்ட விரைவுச் சாலைப் பணிகளை விரைந்து முடித்தால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். இவ்வாறு உன்னிகிருஷ்ணன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT