Published : 01 Jun 2015 08:14 AM
Last Updated : 01 Jun 2015 08:14 AM

ஓ.பன்னீர்செல்வம் உட்பட 50 பேர் கொண்ட அதிமுக தேர்தல் பணிக்குழு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச் சாரம் செய்ய ஓ.பன்னீர்செல்வம் உட்பட 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல் வருமான ஜெயலலிதா அறிவித் துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது பதவியை மே 17-ம் தேதி ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து ஜூன் 27-ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற வுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாகி மீண்டும் முதல்வராகியுள்ள ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதி யில் போட்டியிடுகிறார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூத னன், அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பி.பழனியப்பன், ப.மோகன், பா.வளர்மதி, செல்லூர் கே.ராஜூ, ஆர்.காமராஜ், பி.தங்கமணி, வி.செந்தில் பாலாஜி, எம்.சி.சம்பத், எஸ்.பி.வேலு மணி, டி.கே.எம்.சின்னையா, எஸ்.கோகுல இந்திரா, எஸ். சுந்தர ராஜ், எஸ்.பி. சண்முகநாதன், ந. சுப்பிரமணியன், கே.ஏ. ஜெய பால், முக்கூர் என்.சுப்பிரமணி யன், ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, பி.வி.ரமணா, கே.சி.வீரமணி, தோப்பு வெங்கடாச்சலம், டி.பி. பூனாட்சி, எஸ். அப்துல் ரகீம், சி.விஜயபாஸ்கர், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் அ. தமிழ்மகன் உசேன், அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர்.சின்னசாமி, எம்.பி.க்கள் அன்வர் ராஜா, பி.வேணுகோபால், சசிகலா புஷ் பம், ப.குமார், எஸ்.ஆர். விஜய குமார், டி.ஜி.வெங்கடேஷ் பாபு, அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ஆர்.கமலகண்ணன், எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் வி.அலெக்சாண்டர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக தலை வர் ஆதிராஜாராம், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரை சாமி, துணை மேயர் பா. பெஞ்சமின், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழக தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், வடசென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் நா.பாலகங்கா, தென் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் வி.பி.கலைராஜன், தென் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் விருகை வி.என்.ரவி, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார், ஆர்.கே.நகர் முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் ஆகியோர் தேர்தல் பணிக்குழுவில் நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு அதிமுகவினர் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்ற வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x