Published : 19 Jun 2015 07:51 PM
Last Updated : 19 Jun 2015 07:51 PM

இலங்கைக்கு சின்ன வெங்காயம் ஏற்றுமதி தொடக்கம்: திண்டுக்கல் மார்க்கெட்டில் கிலோ ரூ.55 ஆக உயர்வு

திண்டுக்கல் சின்ன வெங்காயம் மார்க்கெட்டில் இருந்து ஓராண் டுக்குப் பின் 5 கண்டெய்னர்கள் மூலம் இலங்கைக்கு சின்ன வெங்காய ஏற்றுமதி மீண்டும் தொடங்கியுள்ளது.

திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் தமிழகத்திலேயே மிகப்பெரிய சின்ன வெங்காயம் மார்க்கெட் செயல்படுகிறது. இங்கு திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, மதுரை, திருப்பூர், பல்லடம், உடும லைப்பேட்டை, தாராபுரம் மற்றும் மைசூர் பகுதிகளில் இருந்து வியா பாரிகளும், விவசாயிகளும் சின்ன வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இந்த சந்தையில் இருந்து கடந்த காலத்தில் இலங்கை, சிங்கப்பூர், துபை உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியானது. அந்த நாடுகளில் மலிவு விலை சீன வெங்காயம் வரத்தால், சமீபகாலமாக தமிழக வெங்காயத்துக்கு வரவேற் பில்லை. அதனால், கடந்த 6 மாத காலமாக திண்டுக்கல் சந்தை யில் இருந்து இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சின்ன வெங் காயம் ஏற்றுமதி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் சின்ன வெங்காயம் சந்தை கூடியது. வழக்கமாக 4 ஆயிரம் மூட்டைகள் சின்ன வெங்காயம் வரும். தற்போது 2 ஆயிரம் மூட்டை சின்ன வெங்காயம் மட்டுமே விற்பனைக்கு வந்தன. அதனால், தட்டுப்பாடு காரணமாக சின்ன வெங்காயம் கிலோ ரூ.55 வரை விற்றது. மேலும், ஓராண் டுக்குப் பின் மீண்டும் திண்டுக் கல் சந்தையில் இருந்து இலங்கைக்கு 5 கண்டெய்னர்களில் சின்ன வெங் காயம் ஏற்றுமதியாகியுள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் வெங்காயம் ஏற்றுமதியாளர்கள் கமிஷன் மண்டி வர்த்தகர் சங்கத் தலைவர் சவுந்தர்ராஜன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

உற்பத்தி குறைவால் தமி ழகத்தில் மட்டுமில்லாது தற்போது இலங்கையிலும் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. இலங்கை யில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.80 முதல் ரூ.100 வரை கிடைக்கிறது. அதனால், 5 கண்டெய்னர்களில் திண்டுக்கல்லில் இருந்து இலங் கைக்கு ஏற்றுமதி செய்துள்ளோம்.

தட்டுப்பாட்டால் தற்போது மைசூர் வெங்காயம் வர ஆரம்பித் துள்ளது. முதல் தரம் 55 ரூபாய்க் கும், இரண்டாம் தரம், மூன்றாம் தர வெங்காயம், ரூ.40, ரூ.30-க்கும் விற்பனையாகின்றன. விவசா யிகள், தமிழகம் முழுவதும் தற்போது தான் சின்ன வெங்காயம் அதிகளவு சாகுபடி செய்துள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் இந்த வெங்காயம் வந்துவிட்டால் பின்னர் விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x