Published : 14 Jun 2015 11:32 AM
Last Updated : 14 Jun 2015 11:32 AM
வேலூர் ஆண்கள் மத்திய சிறைக்குள் தூக்கி வீசப்பட்ட பார்சலில் இருந்த 10 செல்போன் கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் ஜெயிலர் தாமரைச் செல்வன் மற்றும் போலீஸார் 3-ம் தொகுதியில் நேற்று முன்தினம் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். சிறைக் காவலர் ஆறுமுகசாமி என்பவர் சுவர் மீது பொருத்தப்பட்டிருந்த மின் கம்பியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது 3-ம் தொகுதிக்கும் குடிநீர் தொட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் கருப்பு நிற பார்சல் ஒன்று விழுந்தது. இதை அங்கிருந்த சிறைக் காவலர்கள் எடுத்தனர். மேலும், வெளியே இருந்து பார்சலை வீசிய நபர்கள் யார்? என்று சோதனையிட்டனர். அங்கு யாரும் இல்லை.
இதையடுத்து, கருப்பு நிற பார்சலை சிறை அதிகாரிகள் பிரித்துப் பார்த்தனர். அதில், 10 செல்போன்கள் மற்றும் பேட்டரி இருந்தன. இவை யாருக்காக வீசப்பட்டது என்று தெரியவில்லை. இதுதொடர்பாக பாகாயம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஜெயிலர் தாமரைச்செல்வன் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT