Published : 03 Jun 2015 07:55 AM
Last Updated : 03 Jun 2015 07:55 AM

காடுகளில் ஆராய்ச்சியாளர்கள் நுழைய ரூ. 50 ஆயிரம் கட்டணம்: வனத்துறை ஆய்வுகள் முடங்கும் அபாயம்

காடுகளில் ஆராய்ச்சி நடத்தச் செல் வதற்கு ரூ. 50 ஆயிரம் கட்டணம் செலுத்தினால் மட்டுமே தமிழ்நாடு அரசு வனத்துறை அனுமதி வழங்கு வதால், தமிழகத்தில் வனத்துறை சார்ந்த ஆராய்ச்சிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரசு, தனியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரி யர்கள், காட்டுயிர் பாதுகாப்பு, காடுகளின் வளம், மருத்துவத் தாவ ரங்கள் குறித்து பல்வேறு ஆராய்ச் சிகளை மேற்கொள்கின்றனர். இந்த ஆராய்ச்சிகளில் கிடைக் கும் முடிவுகள், நல்ல கருத்து களைச் செயல்படுத்த ஆராய்ச்சி யாளர்கள் அரசுக்கு பரிந்துரை செய்வர். மத்திய, மாநில அரசு கள், இந்த ஆராய்ச்சிகளின் விவரங்களை அரசின் திட்டங்களில் அமல்படுத்துவர்.

இந்தியாவில், பல்கலைக்கழக ஆராய்ச்சிகளுக்காக மத்திய அறிவியல் தொழில்நுட்பக் கழகம், பல்கலைக்கழக மானியக்குழு, உயிரியல் தொழில்நுட்பத் துறை மற்றும் மத்திய ஆராய்ச்சி தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆராய்ச்சி யாளர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான நிதி, பொருளுதவியை வழங்கி வருகின்றன.

கடந்த ஆண்டு வரை, காடு களில் நடக்கும் வனத்துறைச் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு ஆராய்ச்சி யாளர்களையும், ஆராய்ச்சி மாணவர்களையும் தமிழ்நாடு வனத்துறை அனுமதி கடிதம் மட்டும் பெற்றுக் கொண்டு இலவசமாக காடுகளுக்குள் செல்ல அனுமதி அளித்தது.

தற்போது காடுகளில் ஆராய்ச்சி களுக்காகச் செல்ல ஒரு ஆராய்ச் சிக்கு ரூ.50 ஆயிரம் கட்டணம் செலுத்த தமிழ்நாடு அரசு வனத் துறை உத்தரவு பிறப்பித்துள் ளது.

ஆராய்ச்சி மாணவர்களும், காடுகளுக்குள் செல்ல ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்த அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான கேரளா வில், காடுகளில் ஆராய்ச்சி நடத்த பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு அனுமதிக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து இலவசமாக அனுமதிக் கிறது. ஆனால், தமிழகத்தில் ரூ.50 ஆயிரம் கட்டணம் கேட்பதால், வனத்துறைச் சார்ந்த ஆராய்ச்சிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறை ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:

உலக அளவில் வனத்துறை சார்ந்த ஆராய்ச்சிகள், இந்தியா வில் மிகக் குறைவாகவே நடை பெறுகின்றன. அதனால், மலை, மலை சார்ந்த காடுகள், நீராதா ரங்கள் வனவிலங்குகள், தாவரங் கள் அழிவின் விளிம்பில் உள் ளன. இவற்றைத் தடுக்கவும், காட்டுயிர்களைப் பாதுகாக்கவுமே காடுகளில் ஆராய்ச்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. தற்போது காடுகளில் நுழைய அனுமதிக் கடிதத்துடன், டெபாசிட் தொகை ரூ.25 ஆயிரம், அனுமதிக் கட்டணம் ரூ.25 ஆயிரம் கட்டிய பின்னரே ஆராய்ச்சிகள் மேற்கொள்ள காடுகளுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

அதனால், ஆராய்ச்சியாளர்கள் பணம் கட்டாமல், ஏராளமான ஆராய்ச்சிகள் அனுமதி கிடைக் காமல் தேக்கமடைந்துள்ளன. ஒவ்வோர் ஆண்டும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் செல்கின்றன. இவற்றில் தரமான 12 முதல் 15 ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி வழங்கி நிதி ஒதுக்குகிறது.

பல்கலைக்கழக ஆராய்ச்சி களுக்கு மத்திய அரசு ஒதுக் கும் நிதியில், காடுகளில் செல்வ தற்கு அனுமதிக் கட்டணம் வழங்குவதற்கு தனியாக தொகை ஒதுக்கப்படுவதில்லை.

ஆராய்ச்சிக்கு ஒதுக்கும் நிதியில் இருந்து ஒரு பைசாவைக் கூட, மற்ற பயன்பாட்டுக்கு ஆராய்ச்சியாளர் கள் பயன்படுத்தக் கூடாது. அதனால் ஆராய்ச்சியாளர்கள் காடுகளில் அனுமதி பெற ரூ. 50 ஆயிரத்தை எப்படிச் செலுத்துவது எனத் தெரியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அரசின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட முடியாது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x