Published : 04 Jun 2015 07:57 AM
Last Updated : 04 Jun 2015 07:57 AM

மதுரை மாநகரப் பகுதி அதிமுக வட்டச் செயலர் கொலை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதி வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(55). மதுரை மாநகர் மாவட்ட அதிமுக 77-வது வட்டச் செயலாளரான இவரது மனைவி ஜெயலெட்சுமியும், அதே வார்டு கவுன்சிலராக உள்ளார். நேற்று காலை 6 மணியளவில், சத்திய சாய் நகரிலுள்ள டீக்கடை ஒன்றில் நாளிதழ் படித்துக்கொண்டிருந்த போது, 4 இளைஞர்கள் ராஜேந் திரனை அரிவாளால் வெட்டிவிட்டு ஓடினர்.

வெட்டுக்காயங்களுடன் உயி ருக்குப் போராடிக்கொண்டிருந்த ராஜேந்திரனை அருகிலிருந்தவர் கள் மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அவர் இறந்தார்.

தகவலறிந்த மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சமந்த் ரோஹன் ராஜேந்திரா, உதவி ஆணையர் பீர்முகைதீன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். ராஜேந்திரன் அதிமுகவின் வட்டச் செயலர் மற்றும் கவுன்சிலரின் கணவர் என்பதால் அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பதற்றத்தைத் தவிர்க்க போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.

கவுன்சிலர் ஜெயலெட்சுமி அளித்த புகாரின்பேரில் சுப்பிரமணியபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:

இதே வார்டில் சேகர் என்பவர் அதிமுக வட்டச் செயலராக இருந் தார். அதன்பின் ராஜேந்திரன் அந்த பதவியை பெற்றார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இப்பிரச்சினை யில் சேகரின் மகன் செந்தில் கொலை செய்யப்பட்டார். ராஜேந் திரன் உறவினர் கமல்கருப்பும், ராஜேந்திரனும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் இருந்து விடு தலை பெற உதவுமாறு சேகர் குடும்பத்தினருடன் ராஜேந் திரன் தரப்பினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியுற்றது. இச்சூழலில்தான் இப்போது ராஜேந்திரன் கொல்லப்பட்டுள் ளார். இதுபற்றி 5 தனிப்படை கள் அமைத்து விசாரித்து வருகிறோம் என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x