Published : 31 May 2015 10:28 AM
Last Updated : 31 May 2015 10:28 AM
செம்மரக் கட்டை கடத்தல் கும்பலின் பங்குதாரராக கலால் பிரிவு டிஎஸ்பி தங்கவேலு செயல்பட்டுள்ளது விசாரணையில் உறுதியாகியுள்ளது. இதனை யடுத்து, இந்த வழக்கில் அவர் மூன்றாவது நபராக சேர்க்கப்பட் டுள்ளார்.
ஆம்பூரை அடுத்துள்ள பாலூ ரைச் சேர்ந்த பாமக பிரமுகர் சின்னபையன் என்பவர் செம்மரக் கடத்தல் சம்பவத்தில் கடந்த 26-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
சின்னபையன் பதுக்கி வைத் திருந்த 7 டன் எடையுள்ள செம் மரக் கட்டைகளை வேலூர் கலால் பிரிவு போலீஸ் டிஎஸ்பி தங்கவேலு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மிரட்டி பறித்துச் சென்றுள்ளார். இந்த சம்பவமே சின்னபையன் கொலைக்குக் காரணமாக அமைந் துள்ளது. டிஎஸ்பி தங்கவேலு கடத்தல் தொழிலில் ஈடுபட்டது போலீஸ் அதிகாரிகளை அதிர்ச்சி யடைய வைத்துள்ளது.
இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
வேலூர் மாவட்ட கலால் பிரிவு டிஎஸ்பியாக தங்கவேலு கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். கள்ளச் சாராய ரெய்டுக்குச் சென்ற போது, சத்துவாச்சாரி நாகேந்திரன் வீட்டில் செம்மரம் பதுக்கி வைத்திருக்கும் தகவல் அவருக்கு கிடைத்தது. வேலூர் திரும்பியதும் அவரது வீட்டில் தங்கவேலு நடத்திய ரகசிய சோதனையில் செம்மர கட்டைகளைப் பதுக்கி யிருப்பது உறுதியானது.
இருவரும் நடத்திய பேரத்தின் முடிவில், வீட்டில் இருந்த செம்மரக் கட்டைகளை விற்று கிடைத்த பணத்தில் பெரும் தொகையை தங்கவேலுக்கு நாகேந்திரன் கொடுத்தார். பின்னர், டிஎஸ்பி உதவியுடன் நாகேந்திரன் இரண்டு முறை செம்மரம் கடத்தியுள்ளார்.
இதற்கிடையில், சின்னபையன் பதுக்கிய 7 டன் செம்மரக் கட்டை களை ஆளுக்குப் பாதியாக பிரித் துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். திட்டமிட்டபடியே கடந்த 25-ம் தேதி சின்னபையனை மிரட்டி 7 டன் செம்மரக் கட்டைகளை டிஎஸ்பி அள்ளிச் சென்றார்.
அவரது முன்னிலையில் நாகேந்திரன் அனுப்பிய ஆட்கள் உதவியுடன் 2 லாரிகளில் செம்மரக் கட்டைகள் ஏற்றப்பட்டன. ஒரு லாரி பெங்களூருவுக்கும், மற்றொரு லாரி சத்துவாச்சாரிக்கும் சென் றது. பெங்களூருவில் விற்ற செம் மரத்தில் கிடைத்த பணம் ரூ.32 லட்சம் டிஎஸ்பி-க்கு பங்குத் தொகையாக கிடைத்தது.
செம்மரக் கடத்தலில் அதிக பணம் கிடைத்ததால் டிஎஸ்பி தங்கவேலு கடத்தல் கும்பலுடன் சேர்ந்து பங்குதாரராக மாறினார். செம்மரக் கடத்தல் வழக்கில் கூட்டுச் சதி, செம்மரங்களை மிரட்டி கடத்தி யது, மோசடி, பாதுகாக்கப்பட்ட பட்டியல் இன மரங்களை கடத்தி யது உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் ஆம்பூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் மூன்றாவது நபராக டிஎஸ்பி தங்கவேலு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போலீஸாரின் கட்டுப்பாட்டில் தங்கவேலு பாது காப்பாக உள்ளார். தேவைப்படும் நேரத்தில் அவர் கைது செய்யப் படுவார். அவருக்கு உடந்தையாக இருந்த 4 போலீஸாரை சாட்சிகளாக சேர்ப்பதா? அல்லது வழக்கில் சேர்ப்பதா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT