Published : 29 May 2015 09:10 AM
Last Updated : 29 May 2015 09:10 AM

திருத்தணி, பள்ளிப்பட்டில் ஜமாபந்தி நிறைவு: 1,530 மனுக்கள் மீது தீர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் 11 வட்டாட்சியர் அலுவலகங்களில், வருவாய் தீர்வாய நிகழ்ச்சி (ஜமா பந்தி) கடந்த 14-ம் தேதி தொடங்கியது.

இதில், திருத்தணி வட்டாட் சியர் அலுவலகத்தில் நடந்து வந்த ஜமாபந்தி நேற்று நிறை வடைந்தது. பட்டா மாறுதல், குடும்ப அட்டையில் திருத்தம், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட் டவை தொடர்பாக பொதுமக்கள் அளித்த 1,403 மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன. அதில், 1,015 மனுக்கள் ஏற்கப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டன. 186 மனுக்கள் விசாரணையில் உள்ளன. 202 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த ஜமாபந்தியில், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, பிற்பட்டோர் நல அலுவலர் விக்னேஸ்வரன், பள்ளிப்பட்டு வட்டாட்சியர் ஜெகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற் றனர். இதில், 1,846 மனுக்களில் 515 மனுக்கள் ஏற்கப்பட்டு தீர்வு காணப்பட்டன. 1,062 மனுக்கள் விசாரணையில் உள்ளன. 269 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x