Published : 31 May 2015 10:06 AM
Last Updated : 31 May 2015 10:06 AM

உதகையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: மாடு, கன்றுகளை அடித்துக் கொன்றதால் பீதி - கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல்

நீலகிரி மாவட்ட மக்களிடையே மீண்டும் சிறுத்தை பீதி ஏற்பட் டுள்ளது. குன்னூர் அருகே கால் நடைகளை சிறுத்தை கொன்ற தால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

காட்டேரி பகுதியைச் சேர்ந்த ரத்னவேலு(45) என்பவரது மாடு மற்றும் இரு கன்றுகளை அவரது மகன் மனோஜ்(21), நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு விட்டுள் ளார். அப்போது, திடீரென மாட்டின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அருகே இருந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பார்த்தபோது, சிறுத்தை ஒன்று மாட்டின் கழுத்தை கடித்து இழுத்துச் சென்றுள்ளது. இதுதொடர்பாக, வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இருள் சூழ்ந்து விட்டதால், மாட்டை மேய்ச்சலுக்கு விட்ட இடத்துக்கு நேற்று மீண்டும் சென்று பார்த்துள்ளனர். அப்போது, கன்றுகளின் கால்கள் மட்டுமே கிடைத்தன.

சம்பவ இடத்தில், கால்நடை மருத்துவர் பார்த்தசாரதி ஆய்வு மேற்கொண்டார்.

அவர் கூறும்போது, “மாட்டை கொன்றது ஆண் சிறுத்தையாக இருக்கலாம். இறைச்சியை பதுக்கி வைத்திருப்பதால், கன்றுக் குட்டிகளின் கால்கள் மட்டும் கிடைத்துள்ளன. நீரோடை அருகே கால்தடங்கள் உள்ளதால், அப்பகுதியில்தான் சிறுத்தை உள்ளது. எனவே, பொதுமக்கள் வனப் பகுதிக்குச் செல்ல வேண்டாம்” என்றார்.

தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சிறுத்தை நட மாட்டத்தால் அச்சத்தில் உள்ள னர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென வனத்துறையினரை வலியுறுத்தி யுள்ளனர்.

குன்னூர் வனச்சரகர் சிவா கூறும்போது, “அப்பகுதியில் குடியிருப்புகள் குறைவு, தோட் டங்கள் அதிகமாக உள்ளன. அருகிலேயே வனப் பகுதி உள்ளதால், உணவு தேடி விலங்குகள் தோட்டம் அருகே வருவது சகஜம். அப்போது, சில நேரம் கால்நடைகளை தாக்கிவிடுகின்றன. சிறுத்தை நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x