Published : 22 May 2015 11:00 AM
Last Updated : 22 May 2015 11:00 AM
எஸ்எஸ்எல்சி தேர்வில் தமிழ் அல்லாத பிற மொழிப் பாடத்தை எடுத்து 5 மாணவர்கள் 500-க்கு 500 மதிப்பெண் பெற்று ஒட்டுமொத்த ரேங்க் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், தமிழை ஒரு மொழிப்பாடமாக எடுத்து 499 மதிப்பெண்களுடன் 41 பேர் முதலிடத்தைப் பெற்றனர். அதேநேரத்தில் தமிழ் அல்லாத பிற மொழிகளை அதாவது சமஸ்கிருதம், பிரெஞ்சு பாடத்தை எடுத்து 5 பேர் 500க்கு 500 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அவர்கள் ஒட்டுமொத்த ரேங்க் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். அவர்களின் பெயர் விவரம் வருமாறு:-
1. மெர்ரின் கே.வர்க்கீஸ், ஹில்டன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, பழைய குற்றாலம், திருநெல்வேலி (சமஸ்கிருதம்)
2. பிரித்திகா ஞானசேகரன், கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொண் டப்பநாயக்கன்பட்டி, சேலம் (பிரெஞ்சு)
3. டி.ஹர்ஷா, சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ஸ்ரீரங்கம், திருச்சி (சமஸ்கிருதம்)
4. ஏ.யோகேஸ்வர், மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, லாஸ்பேட்டை, புதுச்சேரி (பிரெஞ்சு)
5. ஜி.கிரிஷா, செயின்ட் ஜோசப் ஆஃப் க்ளூனி பெண் கள் மேல்நிலைப்பள்ளி, லாஸ் பேட்டை, புதுச்சேரி (பிரெஞ்சு).
மேற்கண்ட தகவலை அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் கே.தேவராஜன் வெளியிட்டு உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT