Published : 18 May 2015 10:10 AM
Last Updated : 18 May 2015 10:10 AM

சாலை விரிவாக்கத்துக்காக பழமையான நீர்மருது மரங்கள் வெட்டி அழிப்பு: முதல்வர் தலையிட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சாலையை அகலப்படுத்துதல் என்ற பெயரில் பழமையான, மருத் துவ குணம் கொண்ட நீர்மருது மரங்களை வெட்டி அழிப்பதை தமிழக முதல்வர் தலையிட்டு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வளர்ச்சி நோக்கில் இதுபோன்ற பணிகள் மேற்கொள்வது அவசி யம். எனினும், பல இடங்களில் சாலையை அகலப்படுத்தும்போது ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன.

ஒரு மரத்தை வெட்டினால், 10 மரங்கள் வரை வைத்து வளர்க்க வேண்டும். இதை சுற்றுச் சூழல், வனத்துறை கடுமையாகக் கண்காணிக்க வேண்டும். மிகக் குறைந்த மரங்கள் வெட்டுவதற்கு கோட்டாட்சியரின் முன்அனுமதி பெற வேண்டும். வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை அதிக ரித்தால் வனத்துறையின் மதிப்பீடு மற்றும் அனுமதி பெற வேண்டும். இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந் தாலும், வருமானத்துக்காக பல உண்மைகள் மறைக்கப்பட்டு ஏராள மான மரங்கள் வெட்டி வீழ்த்தப் படுகின்றன.

நெல்லை மாவட்டத்தில் சேத் தூர் முதல் தென்காசி வரையுள்ள சாலையை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராக அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இதற்காக சாலை யின் இருபுறமும் இருந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

இதில் மிகப் பழமையான, மருத் துவ குணம் கொண்ட நீர்மருது மரங்களும் அடங்கும். இதை உடனே நிறுத்த தமிழக முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ், தமிழக மற்றும் இயற்கை ஆர்வலரும் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம் பரனாரின் பேரனுமான கோவை யைச் சேர்ந்த மு.நா.பா.தமிழ் வாணன் கூறியதாவது:

மரங்கள் பறவைகளின் வீடு. அவற்றை வெட்டி வீழ்த்தினால் பறவையினம் அழியத் தொடங்கும். சாலை விரிவாக்கப் பணிகளுக்காக ஒரு மரம் வெட்டப்பட்டால் நான்கு மரக்கன்றுகள் நட்டுவைத்து வளர்க்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்ற உத்தரவு. ஆனால், இது நடைமுறையில் பின்பற்றப்படு வதில்லை.

மதுரையில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் நெல்லை மாவட்ட எல்லை ஆரம்பம் முதல் வாசுதேவநல்லூர் வரை சாலை யின் இரு ஓரமும் மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. குற்றாலம் சாலை, செங்கோட்டை சுற்றியுள்ள சாலைகளிலும் சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேல் வளர்ந்துள்ள பழமையான நீர்மருது மரங்கள் ஏராளமாக உள்ளன.

இவை நிலநடுக்கம் ஏற்பட்டால் கூட சாலையை பாதுகாக்கும் அளவு வலுமையான பிடிமானம் கொண் டவை. சாலை விரிவாக்கத்துக்காக இந்த மரங்கள் அனைத்தையும் வெட்ட நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டு மரங்களில் மஞ்சள் நிற அடையாளமும் குறிக்கப்பட்டுள்ளன. சேத்தூர்-வாசுதேவநல்லூருக்கு இடைப்பட்ட சாலையில் பல இடங் களில் சாலை அகலமாகவே உள் ளது. அந்த பகுதியிலும் மரங் கள் வெட்டுவதற்காக குறியீடுகள் வரையப்பட்டுள்ளன. பல இடங் களில் ஒரு பக்கம் மட்டுமே வெட்டி சாலையை அகலப்படுத்தலாம்.

ஆனால், இதுகுறித்து யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மேலும், மரங்களை வெட்டி பணம் பார்க்க வேண்டும் என்ற நோக்கத் துக்காகவே வெட்டப்படவுள்ளதாக சந்தேகம் எழுகிறது.

இந்த சாலையில் பழமையான நீர்மருது மரங்களை வெட்டாமல், சாலையை அகலப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் நேரடியாக தலை யிட்டு இதற்கு நல்ல தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார். இதே கோரிக்கையை பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அலுவலர் ஒருவர் கூறியது:

இப்பகுதியில் சாலையை அகலப்படுத்தும் பணி நிறைவடை யும் நிலையில் உள்ளது. ஒரு மரத்தை வெட்டினால் 10 மரங் கள் வளர்க்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன்தான் பணி நடக்கிறது. சாலையின் இருபுறமும் சீராக விரிவுபடுத்தாமல், மரங் கள் குறைவாக வெட்டும் வகை யில் மாறுதல் செய்யலாம். நிலை மைக்கேற்ப இந்த நடைமுறையை கடைப்பிடிக்கிறோம்.

எண்ணற்ற வியாதிகளை குணமாக்கும்

மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன உழவியல் துறை தலைவர் சி.சுவாமிநாதன், திண்டுக்கல் காந்தி கிராம பல்கலை. உயிரியல் துறை பேராசிரியர் ஆர்.ராமசுப்பு கூறியதாவது:

வயிற்று உபாதை, சர்க்கரை வியாதி, வாதம், பித்தம், ஆஸ்துமா, நெஞ்சு எரிச்சல், தலைசுற்றல் எனப் பல நோய்களுக்கு நீர்மருது மரப் பட்டை சாறு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவத்திலும் இம்மரப் பட்டையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அணில், காட்டுமைனா உட்பட பல பறவைகள் கூடு கட்டி வாழ இம்மரம் மிகச்சிறந்ததாக திகழ்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x