Published : 30 May 2015 08:28 AM
Last Updated : 30 May 2015 08:28 AM

நீதிமன்றத்தை புறக்கணிக்காமல் எதிர்ப்பை வழக்கறிஞர்கள் பதிவு செய்யலாம்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

எந்தவொரு விசயத்துக்காகவும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளைப் புறக்கணிப்பதைத் தவிர்த்துவிட்டு, மாறாக, அதிக நாட்கள் பணியாற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யலாம் என்று அறிவுறுத்தினார் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல்.

சென்னை- திருப்பதி நெடுஞ் சாலையில் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பெருந் திட்ட வளாகத்தில் புதிதாக கட்டப் பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை நேற்று திறந்து வைத்து தலைமை நீதிபதி மேலும் பேசும்போது, ‘‘நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனை வரும் நீதிமன்றத்தை கோயிலாக நினைத்து கடமையாற்ற வேண் டும். சாதாரண மக்களுக்கும் நீதி கிடைக்க உதவ வேண்டும்’’ என்றார் முன்னதாக, நீதிமன்ற வளா கத்தில் மரக்கன்றுகளை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் நட்டுவைத் தார்.

வழக்கறிஞர்கள், பொதுமக்கள் ஆகியோரது கோரிக்கையை ஏற்று ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க அரசு முடிவு எடுத்தது. 18 ஏக்கரில் ரூ.13,26,44,000 செலவில் ஒருங்கிணைந்த நீதி மன்ற கட்டிடம், நீதிபதிகள் குடி யிருப்பு கட்டும் பணி 2013, பிப். 25-ல் தொடங்கியது. பணிகள் நிறைவடைந்து தற்போது நீதிமன்ற வளாகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூட்ட அரங்கு, நீதி மன்ற நூலகம், வங்கி, அஞ்சல் நிலையம் ஆகியனவும் அமைக்கப் பட்டுள்ளன.

திறப்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தனபாலன், சசிதரன், தமிழக அமைச்சர்கள் ரமணா (பால் வளம்), அப்துல் ரஹீம் (பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலன்), திருவள்ளூர் மாவட்ட நீதிபதி ஜெயசந்திரன், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், பொதுப்பணித் துறை மேற்பார்வைப் பொறியாளர் ரவி ராஜ் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x