Published : 02 May 2014 09:03 AM
Last Updated : 02 May 2014 09:03 AM
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பேரூராட்சி திமுக நகர துணைச் செயலர் அஷ்ரப்அலியின் தங்கை திருமணம் வியாழக்கிழமை கும்பகோணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி தலைமையில் நடைபெற்றது.
இதற்கான அழைப்பிதழில் திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஹைதர் அலி பெயருக்கு பின்னால் எம்.பி. (மயிலாடுதுறை தொகுதி) என அச்சிடப்பட்டு உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும், கட்சி பிரமுகர்களுக்கும் விநியோகிக் கப்பட்டுள்ளது.
இதைக்கண்ட அதிமுகவினர், வாக்குப்பதிவு மட்டும் நடந்து, முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் ஹைதர் அலி பெயருக்குப்பின் எம்.பி. எனக் குறிப்பிட்டு இருப்பது அப்பட் டமான தேர்தல் விதிமீறல் எனத் தெரிவித்தும், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி திருபுவனம் நகர அதிமுக செயலர் சிங் செல்வராஜ் தலைமையில், திருவிடைமருதூர் வட்டாட்சியரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான கலியபெருமாளிடம் புதன்கிழமை இரவு புகார் மனு அளித்தனர்.
இதையடுத்து வட்டாட்சியர் கலியபெருமாள் அளித்த புகாரின்படி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வேட்பாளர் ஹைதர் அலி, அஷ்ரப் அலி மற்றும் அச்சக உரிமையாளர் ஆகிய 3 பேர் மீதும் திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள் ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT