Published : 02 May 2014 08:54 AM
Last Updated : 02 May 2014 08:54 AM

8 பிரிவுகளின் குழப்பத்தில் சிக்கியுள்ள சென்ட்ரல் ரயில் நிலையம்: உளவுத்துறை, பாதுகாப்பு பணிகளில் பெரும் குளறுபடி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யம், நான்கு போலீஸ் நிலையங்கள் மற்றும் ரயில்வே போலீஸ், ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே உளவுத்துறை உள்ளிட்ட எட்டு நிர்வாக பிரிவுகளில் வருவ தால், அதன் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் பெரும் குளறு படிகள் ஏற்பட்டுள்ளன.

கேமரா கண்காணிப்பு மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பணிகளில், ஆர்.பி.எப்பின் தனிப்பிரிவினர் ஈடுபடுகின்றனர்.

இதுதவிர, ரயில்வே போலீஸு டன் சென்னை மாநகர போலீ ஸாரும், சென்ட்ரல் நிலையத்தின் வெளிப்பகுதி, நிலைய பேருந்து நிறுத்தம், வாகன நிறுத்து மிடம், புறக்காவல் மையம் போன்ற வற்றின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.

சென்ட்ரல் நிலையம் மற்றும் பணிமனை ஆகியவை பேசின் பிரிட்ஜ், பூக்கடை, பெரியமேடு மற்றும் யானை கவுனி ஆகிய நான்கு போலீஸ் நிலைய எல்லை களில் வருகிறது. இதனால், எந்த போலீஸ் நிலையத்தினர் ரயில் நிலைய பாதுகாப்பில் ஈடுபடுவது என்ற குழப்பம் நீண்டகாலமாக நிலவுகிறது. இந்த நான்கு போலீஸ் நிலைய உளவுத்துறையினரும், தங்கள் எல்லையிலுள்ள ரயில் நிலையப் பகுதிகளை, நேரடியாக கண்காணிப்பதில்லை. மாறாக ரயில்வே போலீஸ், மற்றும் ரயில்வே உளவுத்துறையினரிடம் தகவல்களை பெற்று, அதையே தங்கள் தலைமைக்கு தெரிவிப்ப தால் உளவுப் பணிகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.

மேலும், சோர்ஸ் மற்றும் இன்பார்மர்களை பயன்படுத்து வதற்கான, மறைமுக செலவுப் பணமும், மேலதிகாரிகளிடமிருந்து கீழ் நிலை போலீஸாருக்கு கிடைக்க வில்லை. இப்பணிக்கு அதிக அங்கீ காரமும் இல்லாததால் சென்ட்ரல் நிலைய உளவுத்துறையில் சேர் வதற்கு போலீஸார் மற்றும் ஆர்.பி.எப்., படையினர் முன் வருவ தில்லை என்ற குற்றச்சாட்டு எழுந் துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் ஓய்வு பெற்ற நிலை யில், அவர்களுக்குப் பதில் நிரந்தர மான உளவுப் பணியில் ஈடுபட யாரும் முன் வராததால், உளவுப் பணிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.

ரயில் நிலைய கேமராக்கள் அனைத்தும், ஆர்.பி.எப்.பின் வெடி குண்டு தடுப்பு பிரிவு வசம் இருப்பதால், மற்ற பிரிவு போலீஸாரால் கேமரா பதிவுகளை பார்க்க முடிவதில்லை. மேலும், ரயில்வே போலீஸில் பெரும் பாலானோர், வி.ஐ.பி., பாதுகாப்பு, அதிகாரிகளுக்கான ஆர்டர்லி பணி உள்ளிட்ட வேறு பணிகளுக்கு அனுப்பப்படுவதால், ரயில் நிலைய பாதுகாப்புக்கு மிகக் குறைவான நபர்களே உள்ளனர்.

எனவே இவற்றையெல்லாம் நீக்கி, ஒருங்கிணைந்த ரயில் நிலைய பாதுகாப்பு போலீஸ் படையை அமைத்தால் மட்டுமே, பாதுகாப்பு பணிகளில் முன்னேற் றம் ஏற்படும் என்று கருதப்படுகிறது.

பாதுகாப்பு இல்லை

ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் சோதனை, கண்காணிப்பு கேமரா ஆகியவை இருந்தாலும் சென்ட் ரல் ரயில் நிலையத்துக்கு சரக்கு கொண்டு செல்லும் பகுதி, சரக்கு இறக்கும் பகுதி, ரயில்கள் பராமரிக் கப்படும் பேசின் பிரிட்ஜ் பணி மனைப் பகுதி ஆகியவற்றில் போது மான பாதுகாப்பு வசதிகள் இல்லை. இங்கும் பாதுகாப்பு மற்றும் கேமரா கண்காணிப்பு வேண்டுமென்று, பல ஆண்டுகளுக்கு முன்பே உளவுத்துறையினர் வலியுறுத் தினாலும், அதை உயரதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

கடந்த 2009ம் ஆண்டு, சென்ட்ரல் நிலையத்திலிருந்து, மின்சார ரயிலை மர்ம ஆசாமி கடத்திச் சென்று பரபரப்பு ஏற்படுத்தினார். இந்த சம்பவம் நடந்து ஐந்தாண்டு கள் கடந்து விட்ட நிலையில் இன்று வரை, அவனை போலீ ஸாரால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x