Published : 31 May 2015 10:24 AM
Last Updated : 31 May 2015 10:24 AM

மாணவர் அமைப்பு மீதான தடையும் ஒருவித அங்கீகாரம்தான்: அருந்ததி ராய் கருத்து

அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்டத்தை ஐஐடி நிர்வாகம் தடை செய்துள்ளதே ஒருவிதமான அங்கீகாரம்தான் என்று எழுத்தா ளர் மற்றும் சமூக ஆர்வலர் அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்த செய்தியில் கூறியிருப்பதாவது:

இந்து மதத்தை வேண்டாம் என்று தூக்கி எறிந்த அம்பேத்கரை இந்துத்வா வாதிகள் கொண்டாடி வருகின்றனர். ஆனால், அவரை உண்மையாக பின்பற்றுபவர்கள் ஏன் குறி வைக்கப்படுகிறார்கள்? அம்பேத்கர் குறித்த ரிங்க் டோன் வைத்திருக்கும் தலித் ஏன் தாக் கப்படுகிறார்? அம்பேத்கர் - பெரி யார் வாசிப்பு வட்டத்தைப் பார்த்து ஐஐடி டீன் ஏன் அஞ்சுகிறார்?

வாசிப்பு வட்டம் மாணவர்களி டம் வெறுப்பைத் தூண்டுவதாக வும், அம்பேத்கர் - பெரியார் என்ற பெயர்கள் அரசியல்தன்மை வாய்ந்ததாக இருப்பதாகவும் கார ணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், உண்மையான காரணம் என்னவென்றால், சாதியம் தொடர் வதற்கும் கார்ப்பரேட் உலகமய மாக்கலுக்கும் இடையே உள்ள தொடர்பை அம்பேத்கர் வாசிப்பு வட்டம் வெளிச்சம் போட்டு காட்டு கிறது. இதைவிட பயங்கரமான அச்சுறுத்தல் ஆளுபவர்களுக்கு எதுவும் இருக்க முடியாது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடதுசாரிகளுடனும் முஸ்லிம் அமைப்புகளுடனும் கை கோர்க் கும் என்று கூறியதும் அச்சுறுத்த லாக இருந்திருக்கும். எனவே அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்டத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்திருப்பது, நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக் கிறோம் என்பதற்கான அங்கீகார மாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x