Published : 29 May 2014 10:46 AM
Last Updated : 29 May 2014 10:46 AM

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் உறுதி: பிடித்தமான கல்லூரி-பாடப்பிரிவு கிடைப்பதில்தான் சிக்கல்

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் இடம் உறுதியாகிவிட்ட நிலையில், பிடித்தமான கல்லூரி, விருப்ப மான பாடப்பிரிவு கிடைக்குமா என்பதில் தான் சிக்கல் ஏற்படக்கூடும்.

2 லட்சம் இடங்கள்

தமிழ்நாட்டில் 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக் கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

பொறியியல் படிப்பில் சேர 2 லட்சத்து 11 ஆயிரத்து 759 பேர் விண்ணப்பங்கள் வாங்கினாலும் அவற்றை பூர்த்தி செய்து கொடுத் தது என்னவோ ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் மட்டுமே. கடந்த ஆண்டு 2 லட்சத்து 35 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்றுத்தீர்ந்தன. ஆனால், சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஒரு லட்சத்து 90 ஆயிரம்தான்.

அனைவருக்கும் சீட் உறுதி

ஒற்றைச்சாளர முறைப்படி, கலந்தாய்வு மூலமாக சுமார் 2 லட்சம் இடங்கள் நிரப்பப்படும் நிலையில், ஒரு லட்சத்து 70 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே வந்திருப்பதால், பொறியியல் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் இடம் உறுதி என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டில் மட்டுமே 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக கிடந்தன. விண்ணப்பித்த அனைவ ரும் கலந்தாய்வுக்கு வருவார்கள் என்று சொல்லிவிட முடியாது. எனவே, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு காலி யிடங்களின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும் என்பது கல்வியாளர்களின் கணிப்பு.

பிடித்தமான கல்லூரி-பாடப்பிரிவு

பொறியியல் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் இடம் உறுதியாகிவிட்டது. ஆனால், பிடித்தமான கல்லூரி, பிடித்தமான பாடப்பிரிவு கிடைப்பதில்தான் சிக்கல் ஏற்படும். கலந்தாய்வு தொடங்கியதும் முதலில் அண்ணா பல்கலைக்கழக துறைசார் கல்லூரிகளில் உள்ள இடங்களும், பின்னர் அரசு மற்றும் உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் டாப் கல்லூரிகளில் உள்ள இடங்களும் மளமளவென நிரம்பும்.

எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகே சன், மெக்கானிக்கல் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பிரிவுகளில் சேரவே பெரும்பாலான மாணவர்கள் விரும்புகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் இதேநிலைதான் தொடர்கிறது. இந்த ஆண்டும் இது தொடரும்பட்சத்தில் மேற்கண்ட பாடப்பிரிவுகளுக்கு கடும் போட்டி இருக்கும். இதற்கிடையே, இந்த ஆண்டு கலை அறிவியல் கல்லூரிகளில் பி.எஸ்சி, பி.காம். போன்ற படிப்புகளில் இடம் கிடைப்பது மிகவும் கடினமாக இருப்பதாக பெற்றோர் கவலையுடன் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x