Published : 06 May 2015 08:28 AM
Last Updated : 06 May 2015 08:28 AM
உலக அளவில் இந்தியாவில் தான் தங்கம் அதிகம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 880 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. உலக அளவில் ஒப்பிடும்போது இது 14 சதவீதம். இந்தியாவில் 2018-ம் ஆண்டுக்குள் ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் கோடி அளவுக்கு தங்க நகைகளின் வர்த்தகம் இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணக்கிட்டுக் கூறுகின்றனர்.
தங்கம் மீதான ஆசை, தங்கம் இறக்குமதி, தங்கத்தின் புழக்கம் அதிகம் இருப்பதுபோல, தங்கத்தில் கலப்படமும் இங்கு அதிகமாகவே இருக்கிறது. பொதுவாக தங்கத்தில் செம்பு, வெள்ளி உலோகங்கள் கலந்தால் தான், விரும்பிய வடிவத்தில் அதை நகையாக செய்யமுடியும். இன்றைய சூழ்நிலையில் தங்க நகைகள் செய்ய செம்பு, வெள்ளி மட்டுமல்லாது, ஓஸ் மீயம், பல்லேடியம், ருத்தீனி யம், இரிடியம் போன்ற வெள்ளை நிற உலோகங்களும் கலக்கப் படுகின்றன. வெள்ளி, செம்பு விலையைவிட விலை குறைவு என்பதால், தங்க நகைகளில் இந்த 4 உலோகங்கள் கலக்கப் படுகின்றன. இதனால், நுகர்வோர் வாங்கும் 22 கேரட் தங்கத்தில் அந்த அளவுக்கு தங்கம் உள்ளதா என்பதைக் கண்டறிவது சற்று கடினமான விஷயமாக உள்ளது.
இதுகுறித்து கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் நிர்மலா தேசிகன் கூறியதாவது:
ஓஸ்மீயம், பல்லேடியம், ருத்தீனியம், இரிடியம் ஆகிய வெள்ளை உலோகங்கள் தற்போது பெரும்பாலான தங்க நகைகளில் கலக்கப்படுகின்றன. இதைக் கண்டறிவது மிகவும் கடினம். நகைகளை உருக்கினால்தான் இந்த உலோகங்களைக் கண்டு பிடிக்க முடியும். அதுவும், 2,200 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப் பப்படுத்த வேண்டும். ஆனால், அந்த அளவு வெப்பத்தில் தங்கம் துகளாக மாறி காற்றில் கலந்துவிடும். இந்த முறைக்கு மாற்றாக, தங்கத்தின் தூய தன்மையை எளிதில் கண்டறிய தற்போது எக்ஸ்.ஆர்.எஸ் (XRS) என்ற கருவி உள்ளது. இந்த கருவியில் ஒரு தங்க நகையை வைத்தால், அதில் எந்த அளவுக்கு தங்கம், வெள்ளி, செம்பு, இதர உலோகங்கள் உள்ளன என்பதை சிறிது நேரத்தில் கண்டறிந்து தெரிவித்துவிடும்.
நகை எந்த அளவுக்கு சுத்தமாக, தரமாக இருக்கிறது என்பதை நுகர்வோர் இந்த கருவி மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். இக்கருவி தற்போது சந்தையில் கிடைக்கிறது. தங்க நகை விற்பனை செய்யும் அனைத்து இடங்களிலும் இந்த கருவி வைக்கப்படுவதை கட்டாயமாக்கினால், நுகர்வோர் கள் ஏமாற்றப்படுவது தவிர்க்கப் படும். தங்க கலப்படம் முற்றிலு மாக தடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT