Published : 03 May 2014 10:29 AM
Last Updated : 03 May 2014 10:29 AM

சோலார் ஜூஸ் கடை

புதுச்சேரியில் சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் தள்ளுவண்டி ஜூஸ் கடை அனைவரையும் கவருகிறது.

விழுப்புரம் அடுத்த வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ், புதுச்சேரி கருவடிகுப்பம் முத்தமிழ் வீதியில் வசிக்கிறார். கருவடிக்குப்பம் கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக சூரிய ஒளி மின்சக்தியால் இயங்கும் சோலார் தள்ளுவண்டி ஜூஸ் மற்றும் குளிர்பானக் கடையை அமைத்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் கூறியதாவது:

ஜூஸ் போடுவதற்கு தேவையான மின்சாரத்தை சோலார் மூலம் எடுக்க இயலும், தனியார் நிறுவனம் அமைத்து தந்துள்ளது. 3 சோலார் பேனல்கள் தள்ளுவண்டி மேலே பொருத்தப்பட்டுள்ளது. தள்ளுவண்டியில் குளிர்சாதன பெட்டி, மின்விளக்கு, மின்சாரத்தை சேமிக்கும் பேட்டரி ஆகியவை இணைத்து தள்ளுவண்டி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த செலவு ரூ.1.92 லட்சம் ஆகும். இரவில் சூரிய ஒளி மின் சக்தியால் ஒளிரும் விளக்குகளை கொண்டு கடையை நடத்துகிறேன். மேலும் மிக்சியும் சோலார் மின்சாரம் மூலமே இயங்குகிறது. கடையின் செயல்பாட்டை ஒரு மாதத்துக்கு தனியார் நிறுவனம் கண்காணிக்கும். இதுவரை தனியார் நிறுவனம் என்னிடம் சோலார் பொருத்தியதற்கான கட்டணத்தை பெறவில்லை. வியாபாரத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து அடுத்த செயல்பாடு இருக்கும். மே மாதம் முதல்தான் இம்முறையில் கடையை நடத்துகிறேன் என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x