Published : 05 Mar 2014 12:00 AM
Last Updated : 05 Mar 2014 12:00 AM
தேர்தலின்போது வாக்காளர் களுக்கு மது விநியோகம் செய் வதை தடுக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தினசரி விற்பனை விவரத்தை தெரிவிக்க வேண்டும். மது குடோன்களில் சிசிடிவி வைக்க வேண்டும் என்பது உள்பட பல அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட உள்ளன.
தேர்தல் காலங்களில் வாக்காளர்களைக் கவர பணத்துடன் மது பாட்டில்களும் ரகசிய மாக விநியோகிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது. தேர்தல் காலத்தில் மதுக்கடைகளில் விற்பனையும் வழக்கத்தைவிட அதிகம் நடக் கிறது. இதை கருத்தில் கொண்டு, தேர்தல் காலங்களில் மதுவிற்பனை மட்டுமின்றி, மது உற்பத்திக் கூடங்கள் மற்றும் மது பாட்டில் குடோன்களையும் தனது கண்காணிப்பு வலைக்குள் கொண்டுவர தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு நெறிமுறைகளை தேர்தல்துறை வகுத்துள்ளது.
டாஸ்மாக்குடன் ஆலோசனை
இதுகுறித்து தமிழக அரசு அதிகாரிகளுக்கு விளக்கும் வகையில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தலைமையில் செவ்வாய்க் கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் டாஸ் மாக் நிர்வாக இயக்குநர் சவுண் டையா, மதுவிலக்கு ஆணையர் மாலிக் பெரோஸ் கான், அமலாக்க கூடுதல் டிஜிபி காந்தி ராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மது விற்பனை கண்காணிப்பு தொடர்பாக தேர்தல் துறை கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள மது உற்பத் திக் கூடங்கள், வடிப்பாலைகள், மது பாட்டில் குடோன்கள் ஆகியவற்றில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்தி மதுவிலக்கு மற்றும் கலால் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
டாஸ்மாக் கடைகளில் தினசரி நடைபெறும் விற்பனை, வருமானம் குறித்த தகவலை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் செலவுக் கணக்கு பார்வையாளருருக்கு கலால் அதிகாரிகள் தினமும் அனுப்ப வேண்டும். தேர்தல் வரை, ஒருநாள் விட்டு ஒரு நாள் அந்த தகவல்களை தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பவேண்டும்.
கடந்த ஆண்டில் இதே கால கட்டத்தில் டாஸ்மாக்கில் நடந்த மது விற்பனை விவரங்களையும் இணைத்து அனுப்பவேண்டும். ஒவ்வொரு மதுக்கடை, குடோன், மது உற்பத்திக் கூடங்களில் தினசரி இருப்பு பற்றிய விவரங் களையும் தெரியப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல நெறிமுறைகள் வகுக்கப்பட்டி ருப்பதாக கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது.
விற்பனை அதிகரித்தால்..
கடந்த ஆண்டைவிட விற்பனை பல மடங்கு அதிகரித்தால், அந்த இடங்களை கண்காணிக்க வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் மூலம், மது பாட்டில்களைக் கொடுத்து வாக்காளர்களைக் கவரும் முயற்சிகள் ஓரளவு தடுக்க முடியும் என்று தேர்தல் துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
இன்று தேர்தல் அறிவிக்கை?
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கை புதன்கிழமை வெளியிடப்படக்கூடும் என்று தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டைவிட விற்பனை பல மடங்கு அதிகரித்தால், அந்த இடங்களை கண்காணிக்க வசதியாக இந்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT