Published : 24 May 2015 01:44 PM
Last Updated : 24 May 2015 01:44 PM
ஆண்டுதோறும் கல்வி நிறுவனங் களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், ஏறுமுகமாக இருக்க வேண்டிய சாக்பீஸ் தொழிலோ, மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் இறக்குமதி உள்ளிட்ட காரணங்களால் தற்போது நசிந்து வருவதாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த 40 ஆண்டு களுக்கும் மேலாக சாக்பீஸ் தொழில் நடைபெறுகிறது. முதலில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் தொடங்கப்பட்ட இத் தொழில், தற்போது சென்னை, திருச்சி, மதுரை, தருமபுரி உட்பட தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. குடிசைத் தொழிலான சாக்பீஸ் தயாரிப்பில் 5,000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.
உப்பளங்களில் ஏற்படும் படி மானத்தில் இருந்து கிடைக்கும் ஜிப்சம் பவுடர்தான் சாக்பீஸுக்கு மூலப்பொருள். இதை நீருடன் கலந்து அச்சில் வார்த்து எடுக்கும் போது நீள்வடிவில் சாக்பீஸ் தயாராகிவிடுகிறது. அச்சில் பதிக் கும்போது ஒட்டாமல் இருக்க மண் ணெண்ணெய் மற்றும் முந்திரி எண் ணெய் கலவையைத் தடவுகின்றனர்.
கலர் சாக்பீஸ் தேவையென்றால் பவுடரில் சேர்க்கும் நீருடன் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம் என கலர் பேஸ்ட் கலக்கின்றனர். அச்சில் வார்த்து எடுத்த சாக்பீஸ்களை வெயிலில் 2 நாள் காயவைத்து, ஒரு சிறிய அட்டை பெட்டியில் 100 சாக்பீஸ்களாக அடுக்கி விற் பனைக்கு அனுப்புகின்றனர்.
இவர்களிடம் ஒரு பெட்டியை 10 ரூபாய்க்கு வாங்கும் வியாபாரிகள், வெளி மார்க்கெட்டில் ரூ. 30 வரை விற்கின்றனர். சமீபகாலமாக இத் தொழிலில் ஈடுபட்டுளோர் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின் றனர். மூலப்பொருள் விலையேற் றத்துக்கு தகுந்தவாறு உற்பத்தி செய்யும் சாக்பீஸுக்கு விலை கிடைக்கவில்லை. போதாக் குறைக்கு சீனாவும், தாய்லாந்தும் தங்கள் தயாரிப்புகளை இந்தியா வுக்கு ஏற்றுமதி செய்வதால், இங்கு சாக்பீஸ் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து ரங்கத்தில் சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள கோவிந்தராஜ் கூறிய தாவது: சாக்பீஸ் தேவை அதிகரித் தும் எங்களைப்போன்று குடிசைத் தொழில் செய்பவர்களுக்கு பல னில்லை. சாக்பீஸ் தயாரிப்பாளர் களுக்கு மானிய விலையில் அரசு மண்ணெண்ணெய் வழங்கி வந்தது. இப்போது வழங்கப்படுவதில்லை.
உள்நாட்டு உற்பத்தியாளருக்கு உதவி செய்வதைவிட்டுவிட்டு, இறக்குமதிக்கே அரசு முக்கியத் துவம் அளிக்கிறது. ஸ்டேஷனரி மொத்த வியாபாரிகள் நவீனமாக வும், கவர்ச்சிகரமாக இருக்கும் இறக்குமதி சாக்பீஸ்களுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். விலை குறைவாக இருப்பதால் பெரும்பாலான பள்ளிகளும் அதையே விரும்புகின்றன.
தற்போது கோடை மழையும் தன் பங்குக்கு பெய்து சாக்பீஸ் உற்பத்தியைக் குறைத்துவிட்டது. ஏழைத் தொழிலாளர்களை மனதில் கொண்டு, வரும் கல்வியாண் டில் பள்ளி, கல்லூரிகள் உள்ளூர் தயாரிப்பு சாக்பீஸ்களை வாங்க முன்வர வேண்டும். மேலும், இறக்குமதி அளவை குறைப்பது டன், அரசு மானிய விலையில் மீண்டும் மண்ணெண்ணெய் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT