Published : 22 May 2015 10:42 AM
Last Updated : 22 May 2015 10:42 AM

பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி வாய்ப்பு தவறிய 6 மாணவர்களின் உயிரை காப்பாற்றிய 104 ஆலோசனை மையம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்ததால் தற்கொலை மனநிலையில் இருந்த 6 மாணவர்களின் உயிரை 104 ஆலோசனை மையம் காப்பாற்றியுள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இந்த தேர்வு முடிவையொட்டி மாண வர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக கடந்த சில நாட்களாக தமிழக அரசின் 104 மருத்துவ உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வந்தது.

மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பணியில் ஏராளமான மனநல நிபுணர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தேர்வு முடிவு கள் வெளியான நாளான நேற்று மட்டும் காலை 10 முதல் இரவு 7 மணி வரை சுமார் 7500 பேர் 104 மையத்தை தொடர்பு கொண்டனர். இந்த அழைப்புகளை மேற்கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு 104 மைய ஆலோசகர்கள் உரிய அறிவுரைகளையும் வழி காட்டுதலையும் வழங்கினர்.

தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்ததால் தற்கொலை மனநிலையில் இருந்த 6 பேர் 104 மையம் அளித்த ஆலோசனையால் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டனர். தேர்வு மட்டும் வாழ்க்கையல்ல, உயிரை மாய்த் துக்கொள்ளக் கூடாது என 104 மைய ஆலோசகர்கள் அளித்த அறிவுரையின் பேரில் அவர்கள் தங்களது தற்கொலை முடிவை கைவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x