Published : 22 May 2015 01:12 PM
Last Updated : 22 May 2015 01:12 PM

குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்கள் தேர்வில் சாதனை

திருச்சி மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு முறையான பள்ளிகளில் பயின்று 2014-15-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வெழுதிய 22 மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த மாணவர்கள் முதலில் ஆடு மேய்த்தல், வீட்டு வேலை, பழங்கள் விற்பனை, கல் பட்டறை, தேநீர் கடை உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். மீட்கப்பட்ட இவர்களுக்கு சிறப்பு மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். தேநீர் கடையில் பணியாற்றி மீட்கப்பட்ட எஸ்.சதீஸ்குமார் எடமலைப்பட்டி புதூர் கலைமகள் உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வெழுதி 438 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இதேபோன்று வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது மீட்கப்பட்ட வி.பிரியதர்ஷினி திருச்சி விமானநிலையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வெழுதி 436 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது மீட்கப்பட்ட என்.கோமதி, மணப்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வெழுதி 424 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். சலவைத் தொழிலில் ஈடுபட்டிருந்த போது மீட்கப்பட்ட வி.மரியா, எடமலைப்பட்டி கலைமகள் உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வெழுதி 419 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x