Published : 05 May 2014 09:04 AM
Last Updated : 05 May 2014 09:04 AM

பஞ்ச பூதங்கள் சுரண்டப்படுகின்றன: நல்லகண்ணு பேட்டி

நாட்டில் பஞ்ச பூதங்களும் சுரண்டப்படுகின்றன என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறினார்.

உதகையில் நடந்த ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை நூல்’ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாட்டின் ஒட்டுமொத்த இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. பெரும் பணக்காரர்களின் பிடியில் சிக்கியுள்ள நிலங்கள், ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில், கட்டடங்களாக மாறி வருகின்றன. நாட்டின் நீர் வளத்தை, பன்னாட்டு குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்து கொண்டுவிட்டன. மது விற்பனையில் கொடிகட்டி பறந்த தொழிலதிபர், பல கோடி ரூபாய் வங்கிக் கடன் வாங்கி, 1,000 விமானங்களை பறக்கவிட்டுள்ளார்; வாங்கிய கடனை திருப்பி செலுத் தாமல், அரசை ஏமாற்றி வருகிறார். இவ்வாறு, பஞ்ச பூதங்களும் சுரண்டப்பட்டு வருகின்றன.

இந்த சுரண்டல்கள், யாரால், எப்படி நடக்கிறது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஓடும் ரயிலில் குண்டு வைப்பது, ரயிலை நிறுத்தி கொள்ளையடிப்பது என, வழிப்பறி, கொலை, கொள்களை போன்ற சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் தினசரி நிகழ்வுகளாகி விட்டன. நாட்டில், சட்டம்- ஒழுங்கு நீர்த்து போயிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவுகளை, நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டி ருக்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x