Published : 07 May 2015 08:10 AM
Last Updated : 07 May 2015 08:10 AM
கோவையில் 5 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் செயல்பாடுகளை முறியடிக்கும் வகையில் நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார் குழுக்களை, கோவையில் அதிகப் படுத்த காவல்துறை ஆலோசித்து வருவதாகத் தெரியவருகிறது.
மாவோயிஸ்ட்கள், நக்ஸ லைட்கள் போன்ற தடை செய்யப் பட்ட இயக்கத்தின் திட்டங்களை முறியடிக்கவும், பழங்குடி மக்களி டம் தடை செய்யப்பட்ட இயக்கங் கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழக காவல்துறை யில் என்.எஸ்.டி. (Naxal special divison) என்ற குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் கடந்த டிசம்பரில் மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தி யதைத் தொடர்ந்து கோவை, தேனி, தருமபுரி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளை உள்ளடக் கிய மாவட்டங்களில் கடந்த பிப்ரவரி முதல் நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. கேரள - தமிழக எல்லை வழியாகவும், மேற்குத் தொடர்ச்சி மலை வழியாகவும் தமிழகத்தில் நக்ஸல்கள் ஊடுருவலாம் என்ற கோணத்தில் இந்தக் குழுக்களின் செயல்பாடுகள் அமைந்திருந்தன.
கோவை மாவட்டத்தில் ஓர் உதவி ஆய்வாளர் தலைமையில் 12 பேர் கொண்ட என்.எஸ்.டி. குழு, மேட்டுப்பாளையம், வால் பாறை, பொள்ளாச்சி என வனப் பகுதி அதிகம் உள்ள இடங்க ளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தடை செய்யப்பட்ட இயக்கங் களின் நடமாட்டத்தைக் கண்காணித் தும் வருகிறது. இந்நிலையில், கோவையில் 5 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத் தைத் தொடர்ந்து, கூடுதலாக என்.எஸ்.டி. குழுக்களை அமைக்க போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
சமாளிப்பது சிரமம்
காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘5 மாவோயிஸ்ட் களையும் தமிழக - ஆந்திர கியூ பிரிவு போலீஸாரே கைது செய் தனர். அங்கு திடீரென ஆயு தத் தாக்குதல் ஏற்பட்டிருந்தால் நிலைமை வேறு விதமாக இருந் திருக்கும். எனவே இது போன்ற இடங்களில் என் எஸ்.டி. பிரிவு அவசியம். இக்குழுவினர் நவீன ஆயுதங்களை பிரயோகிப் பது, எதிரிகளின் திட்டத்தை முறியடித்து அவர்களை மடக்குவது, உயர்ந்த மலைகளில் இருந்து வனத்தை கண்காணிப்பது, மரங்களில் தாவி எதிரிகளைத் தப்பிக்கவிடாமல் தடுப்பது என பல்வேறு பயிற்சிகளைப் பெற் றுள்ளனர். எனவே கூடுதலாக என்.எஸ்.டி. குழுக்களை அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT