Published : 22 May 2015 10:57 AM
Last Updated : 22 May 2015 10:57 AM
சிறைகளில் 10-ம் வகுப்பு தேர்வெழுதிய 217 கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளில் 235 பேர் 10-ம் வகுப்பு தேர்வை எழுதினர். இதில் 217 கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.34 சதவீதமாகும்.
கொலை வழக்கில் தண்டனை பெற்று நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட் டிருக்கும் முத்துராமலிங்கம்(35) 425 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். கொடைக்கானலில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாலசுப்பிரமணியன்(35) 419 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜாகீர் உசேன் 417 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தேர்ச்சி பெற்ற கைதிகளை சிறைத்துறை அதிகாரிகள் பாராட்டினர். அவர்களுக்கு சில பரிசுகளை கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT