Published : 31 May 2015 09:33 AM
Last Updated : 31 May 2015 09:33 AM

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் நாளை திறப்பு: முதல் நாளன்றே பாடப் புத்தகங்கள் விநியோகம்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக் கப்படுகின்றன. முதல் நாளன்றே மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீருடைகள், நோட்டுப் புத்தகங்களும் அடுத் தடுத்து வழங்கப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும் அனைத்து தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்கு மே 1-ம் தேதியும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களுக்கு ஏப்ரல் 23-ம் தேதியும் கோடை விடுமுறை தொடங்கியது. கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக் கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த வாரத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளிப்போகலாம் என்ற எதிர் பார்ப்பில் மாணவர்கள், பெற் றோர் இருந்தனர். ஆனால், அறிவிக்கப்பட்டபடி பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை திட்டவட்டமாக அறிவித்தது. அதன்படி, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை (திங்கள் கிழமை) திறக்கப்படுகின்றன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு முதல் நாளான நாளையே பாடப் புத்தகங் கள் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறியதாவது:

பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படுகின்றன. மாணவர் களுக்கு வழங்குவதற்கான பாடப் புத்தகங்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் ஏற் கெனவே பள்ளிகளுக்கு அனுப் பப்பட்டுவிட்டன. 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் மாதமே புத்தகங்கள் வழங்கப் பட்டுவிட்டன. ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கு, பள்ளி திறக்கும் நாளன்றே பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து சீருடைகள், நோட்டுகள் விநியோகிக்கப்படும். விலையில்லா பாடப் புத்தகங்கள் மூலம் சுமார் 55 லட்சம் மாணவ, மாணவிகளும், சீருடை மூலம் 40 லட்சம் பேரும், நோட்டுப் புத்தகங்கள் மூலம் 60 லட்சம் பேரும் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு கண்ணப்பன் கூறினார்.

ஒரே நாளில் பாடப் புத்தகம், சீருடை, நோட்டுகள் என அனைத் தையும் வழங்கினால், மாணவர்கள் தூக்கிச்செல்வது சிரமமாக இருக் கும் என்பதாலேயே, ஒவ்வொன்றாக வழங்க பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.

ஆர்.கே.நகரில் அப்புறம்..

சென்னை ஆர்.கே.நகர் தொகு திக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டு தேர்தல் நடத்தை விதிமுறை கள் அமலுக்கு வந்துவிட்டன. அத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள் மட்டும் உடனடியாக வழங்கப்படும். முதல்வர் ஜெயலலிதாவின் படம் அச்சிடப்பட்டிருப்பதால், நோட்டுப் புத்தகங்கள் மட்டும் பின்னர் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x