Last Updated : 06 May, 2015 07:42 AM

 

Published : 06 May 2015 07:42 AM
Last Updated : 06 May 2015 07:42 AM

ஆவடி வட்டாட்சியர் அலுவலகம்: உழவர் சந்தை அருகே அமைகிறது

ஆவடி ரயில் நிலையம் மற்றும் உழவர் சந்தை அருகே உள்ள பகுதியில் ரூ.3 கோடி செலவில் ஆவடி வட்டாட்சியர் அலுவலகம் அமைக்கப்படுகிறது.

தொகுதி மறு வரையறை யின்படி, பூந்தமல்லியில் இருந்து பிரித்து ஆவடி சட்டப் பேரவைத் தொகுதி உருவாக்கப் பட்டது. இ்ந்நிலையில் அப் போதைய முதல்வர் ஜெயலலிதா ஆவடியில் வட்டாட்சியர் அலுவலகம் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார். இதையடுத்து, இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. ஆவடி வீட்டுவசதி வாரிய குடியி ருப்பில் உள்ள நூலக கட்டிடம், பருத்திப்பட்டு மற்றும் ரயில் நிலையம் அருகே உழவர் சந்தை அமைந்துள்ள இடம் ஆகியவை பரிசீலிக்கப்பட்டன.

இதுகுறித்து, ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான அப்துல் ரஹீமிடம் கேட்டபோது, ஆவடி யில் வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்காக, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ரூ.3 கோடி நிதி ஒதுக்கினார். இதற்காக இரண்டு, மூன்று இடங்களை ஆய்வு செய்து இறுதியில் ஆவடி ரயில் நிலையம் அருகே உள்ள உழவர் சந்தை அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும்’’ என்றார்.

இதுகுறித்து, தமிழ்நாடு முற் போக்கு நுகர்வோர் மையத்தின் தலைவர் சடகோபன் ‘தி இந்து’ விடம் கூறும்போது, ஆவடி ரயில் நிலையம் அருகே வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது வரவேற் கத்தக்கது. ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்துக்கு அருகே இந்த இடம் அமைந்திருப்பதால் பொதுமக்கள் அனைவருக்கும் வந்து செல்ல வசதியாக இருக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x